ஏ. மலர்மன்னன்

தமிழக அரசியல்வாதி

ஏ. மலர்மன்னன் (A. Malarmannan) (1937 - 18 மே 2014) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

ஏ. மலர்மன்னன்
A Malarmannan.jpg
தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 16, 1937(1937-01-16)

திருச்சிராப்பள்ளி

இறப்பு 18 மே 2014(2014-05-18) (அகவை 77)
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1960-1993 &

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1993-2014

சட்டமன்ற உறுப்பினர்தொகு

திருச்சிராப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தமிழக சட்டப்பேரவைக்கு (1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகள்) திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராகதொகு

1993 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். மலர்மன்னன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். [3]

அரசியல் வாழ்க்கைதொகு

மலர்மண்ணன் 1937 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். கா. ந. அண்ணாத்துரையின் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவர் தனது சிறு வயதிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 1960 களின் முற்பகுதியில் இருந்து அவர் பொது நலனுக்கான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். மேலும் 1976 இல் அவர் அவசரநிலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததற்காக மிசாவின் கீழ் கைதானார். அவர் வைகோவின் நெருக்கமானவராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். 1970 கள் மற்றும் 80 களில் திமுக திருச்சிராப்பள்ளி நகர்மன்றத் தலைவராகவும், திமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பினராகவும், திருச்சிராப்பள்ளி நகர பொருளாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி நகர திமுக செயலாளராகவும் இருந்தார். கூடுதலாக, அவர் பல தமிழக சட்டமன்ற சபை குழுக்களில் உறுப்பினராக இருந்தார், திருச்சிராப்பள்ளி மாவட்ட வணிகர்கள் சங்கத் தலைவர், திருச்சிராப்பள்ளி கூட்டுறவு சங்கத் தலைவர், பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கான தலைவராகவும் பணியாற்றினார்.1994 ஆம் ஆண்டில் மதிமுக நிறுவப்பட்ட பின்னர் அவர் முக்கிய தலைவராகவும், திருச்சிராப்பள்ளி மாவட்ட செயலாளராகவும் 20 ஆண்டுகள் இருந்தார். அவர் மதிமுக உறுப்பினர்களால் மிகவும் மதிக்கப்பட்டார். மேலும், அரசியல் செயற்பாட்டாளர்களின் மரியாதையைக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டும் பெற்றிருந்தார். அவர் தலைமை, நேர்மை, எளிமை மற்றும் கடின உழைப்பு காரணமாக மரியாதை மற்றும் விசுவாசமான பின்தொடர்வோரைப் பெற்றார். இரண்டு பதிற்றாண்டுகளுக்கு முன்னர் கட்சி அமைக்கப்பட்டபோது வைகோ பெயரை மதிமுகவின் பொதுச் செயலாளராக முன்மொழிந்தவர் ஆவார். உடல்நலக்குறைவு காரணமாக தனது 77 வயதில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இறந்தார். [2] [4] [5] [6] [7]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._மலர்மன்னன்&oldid=3006485" இருந்து மீள்விக்கப்பட்டது