ஏ. வெங்கடேசு நாயக்கு

இந்திய அரசியல்வாதி

ஏ. வெங்கடேசு நாயக்கு (A. Venkatesh Nayak) இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1936 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இவர் காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 10ஆவது மக்களவைக்கு வெங்கடேசு நாயக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தேவதுர்கா தொகுதியில் போட்டியிட்டு ஓர் இடத்தைப் பெற்றார். 2015 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த இரயில் விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இறந்த ஐந்து பேரில் வெங்கடேசு நாயக்கும் ஒருவராவர்.[1][2]

ஏ. வெங்கடேசு நாயக்கு
A. Venkatesh Naik
சட்டப் பேரவை உறுப்பினர், கருநாடகம்
பதவியில்
13 மே 2013 – 24 ஆகத்து 2015
முன்னையவர்கே. சிவானந்தா கௌடா நாயக்கு
தொகுதிதேவதுர்கா
இந்தியர் நாடாளுமன்றம்
for இராய்ச்சூர்
பதவியில்
1991–1996
முன்னையவர்ஆர். அம்பண்ணா நாயக்கு தோர்
பின்னவர்இராசா ரங்கப்பா நாயக்கு
பதவியில்
1998–2009
முன்னையவர்இராசா ரங்கப்பா நாயக்கு
பின்னவர்சன்னா பக்ரியப்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-06-06)6 சூன் 1936
ராய்ச்சூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு24 ஆகத்து 2015(2015-08-24) (அகவை 79)
அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
(1968–2015)
துணைவர்சாவித்ரி (1964–2015)
பிள்ளைகள்5

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வெங்கடேசு_நாயக்கு&oldid=3812332" இலிருந்து மீள்விக்கப்பட்டது