ஏ பைன் டார்க் லைன் (நாவல்)

எ பைன் டார்க் லைன் (A Fine Dark Line) என்பது அமெரிக்க எழுத்தாளர் ஜோ. ஆர். லான்ஸ்டேல் 2002 ஆம் ஆண்டு எழுதிய ஒரு புதினமாகும். இந்தப் புதினத்தின் கதைகளம் 1958 ஆம் ஆண்டு டெக்சஸிலுள்ள டூமோண்ட்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதினமானது சப்டெர்ரேனியன் அச்சகத்தின் மூலமாக வரையறுக்கப்பட்ட பதிப்பாகவும், மிஸ்டீரியஸ் அச்சகத்தின் மூலமாக வன்னட்டை, மென்னட்டைப் பதிப்புகளாகவும் வெளிவந்தது. மென்னட்டைப் பதிப்பு 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.[1]

எ பைன் டார்க் லைன்
முதலாவது வரையறுக்கப்பட்ட பதிப்பு
நூலாசிரியர்ஜோ. ஆர். லான்ஸ்டேல்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
வகைபுதினம்
வெளியீட்டாளர்சப்டெர்ரேனியன் அச்சகம், மிஸ்டீரியஸ் அச்சகம்
வெளியிடப்பட்ட நாள்
1 ஜூன் 2002
ஊடக வகைஅச்சு (வன்னட்டை, மென்னட்டை)
பக்கங்கள்412
ISBN1-931081-66-2
OCLC51583529
முன்னைய நூல்த பாட்டம்ஸ் (புதினம்) (2000)
அடுத்த நூல்சன்செட் அண்ட் சாடஸ்ட் (2004)

கதைச்சுருக்கம்

தொகு

இந்தப் புதினம் ஸ்டான்லி மிட்செல், என்ற பதின்மூன்று வயது சிறுவனின் கண்ணோட்டத்தில் கூறப்படும் கதையாகும். இவனுக்கு ஒரு சகோதரன் இருக்கிறான். இக்கதையில் அவர்கள் ஒரு திரையரங்கின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். ஸ்டான்லிக்கு ஒரு தகர பெட்டி கிடைக்க அதில் பழைய சிக்கலான காதல் கடிதங்கள் இருந்தன. அதன் மூலம் அவர் ஒரு பழைய எரிந்த வீட்டிற்கு செல்ல நேரிடுகிறது. அங்கு இரண்டு பெண்களின் மர்மமான இறப்பு மறைக்கப்பட்டது தெரியவந்து, அந்த மரணங்களின் புதிர்களை தீர்க்க முயன்றபோது, அவர் குடும்பத்தாரையும், நண்பர்களையும் ஆபத்திற்கு உட்படுத்துகிறார்.[2]

சான்றுகள்

தொகு
  1. Subterranean Press. "A Fine Dark Line by Joe R. Lansdale — Subterranean Press". Archived from the original on 2014-12-05. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.
  2. Joe R. Lansdale. "A FINE DARK LINE". Kirkus Reviews. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ_பைன்_டார்க்_லைன்_(நாவல்)&oldid=3665462" இலிருந்து மீள்விக்கப்பட்டது