ஐகுந்தம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
ஐகுந்தம் அல்லது ஐகொந்தம் (Ikondam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், பருகூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது ஐகொந்தம்கொத்தப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
ஐகுந்தம்
ஐங்குன்றம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 120 |
பெயர் வரலாறு
தொகுஇவ்வூரைப் பற்றிய குறிப்பு கங்காவரம் என்ற பகுதியில் கண்டுபிடிக்கபட்ட மூன்றாம் இராஜேந்திர சோழனின் கி.பி. 1249 ஆண்டு கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐங்குன்றம் என்று இந்த ஊர் குறிப்பிடபட்டுள்ளது. இந்த ஐங்குன்றம் தற்போது உள்ள ஐகுந்தத்தை குறிப்பதாக உள்ளது. இதில் உள்ள றன்னகரம் தன்நகரமாகவும் றன்னகரமாகவும் மாறியுள்ளன.[1]
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டத் தலைநகரான பர்கூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 252 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 115.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Ikondam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-16.