ஐக்கிய அமெரிக்கப் பேரவை

(ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐக்கிய அமெரிக்கப் பேரவை (United States Congress) என்பது ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் சட்டமன்றமாகும். இது மேலவை (செனட்) மற்றும் கீழவை என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது.

ஐக்கிய அமெரிக்கப் பேரவை
117ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
அவைகள்செனட்
சார்பாளர்கள் அவை
வரலாறு
தோற்றுவிப்புமார்ச்சு 4, 1789
(235 ஆண்டுகள் முன்னர்)
 (1789-03-04)
முன்புகூட்டமைப்பின் பேரவை
புதிய கூட்டத்தொடர் தொடக்கம்
சனவரி 3, 2021
தலைமை
செனட் தலைவர்
கமலா ஆரிசு ()
சனவரி 20, 2021 முதல்
சார்பாளர்கள் அவைத் தலைவர்
நான்சி பெலோசி ()
சனவரி 3, 2019 முதல்
செனட் இடைக்காலத் தலைவர்
பாட்ரிக் லெய்கி ()
சனவரி 3, 2021 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்535 வாக்களிக்கும் உறுப்பினர்கள்
  • 100 செனட்டர்கள்
  • 435 சார்பாளர்கள்
6 வாக்களிக்கா உறுப்பினர்கள்
செனட் அவை அரசியல் குழுக்கள்
பெரும்பான்மை (50)

சிறுபான்மை (50)

சார்பாளர்கள் அவை அரசியல் குழுக்கள்
பெரும்பான்மை (220)

சிறுபான்மை (212)

வெற்றிடம் (3)

  •      வெற்றிடம் (3)
தேர்தல்கள்
அண்மைய செனட் அவை தேர்தல்
நவம்பர் 3, 2020
நவம்பர் 3, 2020
அடுத்த செனட் அவை தேர்தல்
நவம்பர் 8, 2022
அடுத்த சார்பாளர்கள் அவை தேர்தல்
நவம்பர் 8, 2022
கூடும் இடம்
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்
வாசிங்டன், டி. சி.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வலைத்தளம்
www.congress.gov
அரசியலமைப்புச் சட்டம்
ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு

மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத ஆறு பேராளர்கள் அமெரிக்க சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

குறிப்புகள்

தொகு
  1. The independent senators (Angus King and Bernie Sanders) formally caucus with the Democratic Party.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_அமெரிக்கப்_பேரவை&oldid=3531398" இலிருந்து மீள்விக்கப்பட்டது