ஐக்கிய அமெரிக்க வீடு வெற்றுக்குமிழி, 2007 - 2008
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
அமெரிக்காவில் வீடு வாங்குவதற்கு தரமற்ற கடன்களை நுகர்வோருக்கு கடந்த 15 வருடங்களாக மேலாக வங்கிகள் வழங்கி வந்தன. இப்படி கடன் பெற்று பெரிய வீடுகளை பலர் வாங்க முனைந்ததால், வீடுகள் விரைவாக எங்கும் கட்டப்பட்டன. இந்தக் கடன்களின் வட்டியை ஆதாயமாகப் பார்த்த முதலீட்டாளர்கள் இவற்றை வாங்கி உலக முதலீட்டாளர்களுக்கும் விற்றனர். கடன் கொடுப்பவர் (வங்கி), கடன் தரகர், வீடு விற்பவர், கடனை முதலீடாகப் பெறுபவர், பின்னர் அதை முதலீடாக விற்பவர் என்று அனைவரும் ஒரு கழிவு கிடைத்ததால் இந்த செயற்பாடு பெருகியது. இதில் பேராசை, எமாற்று, மோசடி எல்லாம் கலந்து இருந்தது. இப்படி தமது வருமான எல்லைக்கு மீறி கடன் பெற்று வீடு வாங்கியோர் காலப்போக்கில் தமது கடனை கட்ட முடியாமல் திணறினர். அதே வேளை இக்காலத்தில் அதிகமான வீடுகளும் கட்டப்பட்டிருந்தன. இதனால் விலை வீழ்ந்தது. கடனை கட்ட முடியாதோரிடம் இருந்து வீடுகளை வங்கிகள் மீள் பெற வேண்டியதாகிற்று. இந்த வீடுகளையும் தமது கடனை மீழ்பெறும் அளவுக்கோ அல்லது முற்றிலுமோ விற்க முடியாதவாறு வங்கிகள் திணறின. தொடராக கடனில் முதலீடு செய்து வந்த வட்டியில் இலாபம் பெற முயன்ற முதலீட்டாளர்களும் நட்டம் அடைந்தனர். இந்த நிலை மோசம் அடைந்து அமெரிக்காவின் ஆதனத் தொழிற்துறை (Real Estate business) வீழ்ச்சி கண்டது. அது உலகின் (குறிப்பாக அமெரிக்காவின்) பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு வழிகோலியது.