ஐசிலோ (யானை)

தென்னாப்பிரிக்க யானை

ஐசிலோ (Isilo) (1956-2014) என்பது மிகப்பெரிய ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றாகும். இது இறப்பதற்கு முன்பு தெற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய உயிருள்ள யானையாக இருந்தது.[1][2] 100 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள தந்தங்களை இந்த ஆண் யானை கொண்டிருந்தது.

இசிலோ முதுமை காரணமாக இயற்கையான காரணங்களால் இறந்தாலும், இதன் மரணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் இதன் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது தேசிய பாரம்பரிய கலைப்பொருளாக கருதப்படும் இதன் தந்தங்கள் காணவில்லை.

பின்னணி

தொகு

ஒரு ஆப்பிரிக்க யானையான ஐசிலோ தென்னாப்பிரிக்காவிலுள்ள தெம்பே யானைப் பூங்காவில் வாழ்ந்தது. இது உலகின் மிகப்பெரிய யானைகள் இதுவும் ஒன்று. சுலு மொழியில் ஐசிலோ என்றால் “அரசன்” என்று பொருள்படும்.

1950 களின் பிற்பகுதியில் பிறந்த இது இறக்கும் போது குறைந்தது 58 வயதாக இருந்திருக்கலாம். [1] ஐசிலோ 6.5 முதல் 7 டன் வரை எடை கொண்டது.[3] [2] ஐசிலோவின் தந்தங்கள் 3 மீட்டர் (9 அடி) நீளத்திற்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. வலது தந்தம் சுமார் 65 கிலோ (143 பவுண்டுகள்) மற்றும் இடது சுமார் 60 கிலோ (132 பவுண்டுகள்) எடை கொண்டது.[1] [2]

இறப்பு

தொகு

ஐசிலோ, 10 ஜனவரி 2014இல் பூங்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அதன் சொந்த இடமாக அறியப்பட்ட பகுதியில் இயற்கையான காரணங்களால் இறந்தது.[2] இதன் சடலம் மார்ச் 2014 இன் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மரணம் ஏப்ரல் 4, 2014 அன்று செம்வெலோ வனவிலங்கு மற்றும் தெம்பே யானை பூங்காவின் மேலாளர் எர்னஸ்ட் ராபர்ட்ஸால் அறிவிக்கப்பட்டது. [2]

இது இறந்து இரண்டு வார காலத்திற்குள் இதன் தந்தங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அகற்றப்பட்டிருக்கலாம். அவை பெரும்பாலும் மூக்குக் கொம்பன் வேட்டைக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் மொசாம்பிக்[2] எல்லைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அங்கிருந்து உலகின் மிகப்பெரிய தந்தங்களுக்கான சந்தையான தொலை கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. [1]

ஐசிலோவின் தந்தங்கள் கறுப்புச் சந்தை மதிப்பு சுமார் தென்னாப்பிரிக்க ரான்ட் 3 மில்லியன் (சுமார் $250,000. அமெரிக்க டாலர்) என்று மதிப்பிடப்பட்டது.[2]

மரணத்திற்கான எதிர்வினைகள்

தொகு

இசிலோவின் மரணம் அதன் பிரபல அந்தஸ்து மற்றும் தேசிய பாரம்பரிய கலைப்பொருளாக கருதப்படும் அதன் தந்தங்களை இழந்ததன் காரணமாக சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.[4]

ஐசிலோவின் தந்தங்கள் தெம்பே குலத்தின் பாரம்பரியத்தில் வந்தவரும் தெம்பே யாணைப் பூங்காவின் பகுதி காவலரும், தெம்பே குலத்தின் தலைவருமான இன்கோசி மபுடு தெம்பே, தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக காட்சிப் பொருட்களுடன் வைக்க டர்பனில் உள்ள சாகா விமான நிலையத்தில் தந்தங்களை வழங்க திட்டமிட்டார். ஏப்ரல் 2014 இல், இன்கோசி தெம்பே காணாமல் போன தந்தங்களைத் திரும்பக் கொடுப்பதற்கு R100 000 (தோராயமாக $8600 அமெரிக்க டாலர்) வெகுமதியை அறிவித்தார்.[1]

மற்ற பெரிய யானைத் தந்தங்கள்

தொகு

ஜூன் 2014 இல் கென்யாவில் உள்ள சாவோ கிழக்கு தேசியப் பூங்காவில், ஐசிலோவின் பெரிய தந்தங்களைப் போன்றே இருந்த கிழக்கு ஆபிரிக்காவின் மிகப்பெரிய யானையான சட்டாவோ விஷம் கலந்த ஈட்டிகளால் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டது.[5]

புத்தகங்கள் மற்றும் பிற ஊடகங்கள்

தொகு

உலகிலேயே மிகப்பெரிய யானைகளை தெம்பே தேசிய யானைப் பூங்காவில் காணலாம் என்று நம்பும் டாக்டர். ஜோஹன் மரைஸின் இரண்டு புத்தகங்களில் ஐசிலோ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச வனவிலங்கு நிபுணரான ஜேம்ஸ் கியூரி, ஐசிலோ காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக படம் எடுத்தவர். 2016 ஆம் ஆண்டில், லாஸ்ட் ஆஃப் தி பிக் டஸ்கர்ஸ் பூமியில் உள்ள மிகப்பெரிய யானைகள் மற்றும் அவற்றின் உயிர்வாழ்வை உறுதிசெய்ய என்ன செய்யப்படுகிறது என்பது பற்றிய ஆவணப்படத்தை படமாக்க ஒரு ஆரம்பக்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆவணப்படம் அக்டோபர் 2018 இல் வெளியிடப்பட்டது [6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Reward for return of stolen 'magnificient' [sic] tusks" (in en). https://www.news24.com/Archives/Witness/Reward-for-return-of-stolen-magnificient-tusks-20150430. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Multi-million rand tusks stolen from SA's biggest tusker". ShowMe™ - Nelspruit (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-02.
  3. "Tembe Elephant Park". www.royalthonga.com. Archived from the original on 2014-09-13.
  4. "Isilo Biggest Tusker – Tembe Elephant Park Lodge" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-04-14. பார்க்கப்பட்ட நாள் 2020-05-29.
  5. "Beloved African Elephant Killed for Ivory—"Monumental" Loss". 2014-06-16 இம் மூலத்தில் இருந்து June 20, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140620075902/http://news.nationalgeographic.com/news/2014/06/140616-elephants-tusker-satao-poachers-killed-animals-africa-science. 
  6. "Last of the Big Tuskers". Kickstarter (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசிலோ_(யானை)&oldid=4108108" இலிருந்து மீள்விக்கப்பட்டது