தொலை கிழக்கு

தொலை கிழக்கு (Far East) அல்லது தூரக் கிழக்கு என்பது புவியியல்படி கிழக்காசியா (வடகிழக்கு ஆசியா உட்பட), உருசியத் தொலை கிழக்கு (வடக்காசியாவின் அங்கம்), தென்கிழக்காசியாவைக் குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் சொல்லாகும்.[1] சில நேரங்களில் பொருளியல், பண்பாட்டுக் காரணங்களுக்காக தெற்கு ஆசியா நாடுகளும் இந்த வரையறையில் உட்படுத்தப்படுகின்றன.[2]

தொலை கிழக்கு
தொலை கிழக்கு நாடுகளின் அமைவிடம், புவியியல்படி வரையறை
சீனப் பெயர்
சீன எழுத்துமுறை 遠東
எளிய சீனம் 远东
சொல் விளக்கம் Far East
Filipino name
Tagalog Silanganan (poetic)
Malayong Silangan (literal)
Indonesian name
Indonesian Timur Jauh
Japanese name
Kanji 極東
Korean name
Hangul 극동
Hanja 極東
மலாய்ப் பெயர்
மலாய் تيمور جاوء
Timur Jauh
Mongolian name
Mongolian Als Dornod
Portuguese name
Portuguese Extremo Oriente
Russian name
Russian Дальний Восток
பஒஅ[ˈdalʲnʲɪj vɐˈstok]
Romanization Dál'niy Vostók
Thai name
Thai ตะวันออกไกล
Tawan-oak klai
Vietnamese name
Quốc ngữ Viễn Đông

1960களிலிருந்து, இப்பகுதி பன்னாட்டு ஊடகங்களில் கிழக்காசியா என்ற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.[3][4] தொலைக்கிழக்கு என்றப் பயன்பாடு தற்காலத்தில் பழமையானதாகவும் புண்படுத்துவதாகவும் இனத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகின்றது.[3] "தொலை கிழக்கு" என்பது ஐரோப்பியர் நோக்கிலிருந்து பிறந்ததாகும்; இதன்படி தென்மேற்கு ஆசியா அல்லது "மத்திய கிழக்கு நாடுகள்" "அண்மைக் கிழக்கு" எனப்படுகின்றது.

தொலைகிழக்கு என்ற சொல் 12ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகின்றது. இதே காரணங்களுக்காக சீன மக்கள் 19ஆவது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளை தொலை மேற்கு "டாய்ச்சி (泰西)" என்றழைத்தனர்; அரபுநாடுகளுக்கு மேற்கிலிருந்து அனைத்து நாடுகளுமே தொலை மேற்கு நாடுகளாம்.

தொலை கிழக்கு என்ற சொல் ஐரோப்பாவிலிருந்து இவை மிகவும் கிழக்கில் உள்ளபோதும், பண்பாட்டின்படி மேற்கத்திய நாடுகளான ஆத்திரேலியா, நியூசிலாந்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆள்புலங்களும் மண்டலங்களும்

தொகு
பெயர்[5] and
ஆள்புலம், கொடியுடன்
பரப்பு
(கிமீ²)
மக்கள்தொகை
(ஜூலை 1 2002 மதிப்.)
மக்களடர்த்தி
(ச.கிமீக்கு)
தலைநகரம்
  புரூணை 5,770 350,898 60.8 பண்டர் செரி பெகாவான்
  கம்போடியா 181,040 12,775,324 70.6 புனோம் பென்
  சீனா[6] 9,584,492 1,384,303,705 134.0 பெய்ஜிங்
  ஆங்காங் (சீனா)[7] 1,092 7,303,334 6,688.0
  இந்தோனேசியா[8] 1,419,588 227,026,560 159.9 ஜகார்த்தா
  ஜப்பான் 377,835 126,974,628 336.1 தோக்கியோ
  லாவோஸ் 236,800 5,777,180 24.4 வியஞ்சான்
  மக்காவு (சீனா)[9] 25 461,833 18,473.3
  மலேசியா 329,750 22,662,365 68.7 கோலாலம்பூர்
  மங்கோலியா 1,565,000 2,694,432 1.7 உலான் பத்தூர்
  மியான்மர் 678,500 42,238,224 62.3 நைப்பியிதோ[10]
  வடகொரியா 120,540 22,224,195 184.4 பியொங்யாங்
  பிலிப்பீன்சு 300,000 84,525,639 281.8 மணிலா
  உருசியா[11] 13,115,200 39,129,729 3.0 மாஸ்கோ
  சிங்கப்பூர் 704 4,483,900 6,369.0 சிங்கப்பூர்
  தென் கொரியா 98,480 48,324,000 490.7 சியோல்
  தாய்லாந்து 514,000 62,354,402 121.3 பேங்காக்
  கிழக்குத் திமோர்[12] 15,007 952,618 63.5 டிலி
தாய்வான்[13] 35,980 22,548,009 626.7 தாய்பெய்
  வியட்நாம் 329,560 81,098,416 246.1 ஹனோய்

காட்சியகம்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
 1. "Oxford Dictionaries - Dictionary, Thesaurus, & Grammar". askoxford.com. Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
 2. "The 'Far Eastern Economic Review' for example covers news from India and Sri Lanka". Archived from the original on 2006-07-20. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
 3. 3.0 3.1 "A menagerie of monikers". தி எக்கனாமிஸ்ட். 7 January 2010. http://www.economist.com/node/15213613. பார்த்த நாள்: 9 July 2011. 
 4. Reischauer, Edwin and John K Fairbank, East Asia: The Great Tradition, 1960.
 5.   Continental regions as per UN categorisations (map), except 12. Depending on definitions, various territories cited below (notes 6, 11-13, 15, 17-19, 21-23) may be in one or both of Asia and ஐரோப்பா, Africa, or ஓசியானியா.
 6.   The current state is formally known as the சீனா (PRC), which is subsumed by the eponymous entity and civilisation (China). Figures given are for mainland China only, ஆங்காங், மக்காவு, சீனக் குடியரசு சேர்க்காதது.
 7.   ஆங்காங் சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் (SAR) ஒன்று..
 8.   இந்தோனேசியா is often considered a transcontinental country in Southeastern Asia and ஓசியானியா; figures do not include Irian Jaya and மலுக்கு தீவுகள், frequently reckoned in Oceania (மெலனீசியா/ஆஸ்திரலேசியா).
 9.   மக்காவு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் (SAR) ஒன்று.
 10.   The administrative capital of மியான்மர் was officially moved from Yangon (Rangoon) to a militarised greenfield just west of Pyinmana on 6 November 2005.
 11.   உருசியா is generally considered a transcontinental country in Eastern Europe (UN region) and வடக்கு ஆசியா; population and area figures are for Asian portion only.
 12.   கிழக்குத் திமோர் is often considered a transcontinental country in Southeastern Asia and ஓசியானியா.
 13.   Figures are for the area under the de facto control of the சீனக் குடியரசு (ROC) government, frequently referred to as சீனக் குடியரசு. Claimed in whole by the PRC; see political status of Taiwan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலை_கிழக்கு&oldid=3596028" இலிருந்து மீள்விக்கப்பட்டது