தந்தப் பல் (Tusks) என்பது நீண்ட, வளரும் முன் பல்லினைக் குறிக்கும். இது ஒன்றாகவோ இரண்டாகவோ பாலூட்டிகளில் இருக்கும். தந்தப் பல் தொடர்ந்து வளரும் விதமாக தன்மையைக் கொண்டுள்ளது.[1][2]

தந்தப் பல்

யானையின் மேல் தாடையில் உள்ள இரண்டு முன்னம் பற்களும் வளர்ந்து யானைக்கோடுகள் ஆகின்றன. யானையின் தந்தப் பல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். இவை பொதுவாக ஆண்டுக்கு ஏழு அங்குலம் (17 அல்லது 18 செமீ) வரை வளர்கின்றன. ஆப்பிரிக்க யானைகளில் களிறு (ஆண்), பிடி (பெண்) இரண்டுமே நன்கு வளர்ச்சியடைந்த தந்தப் பற்களைக் கொண்டுள்ளன. இவற்றின் தந்தப் பல் பத்து அடி (3 மீட்டர்) நீளம் வரை வளரக்கூடியது. 90 கிலோ வரை எடை கொண்டது. ஆசிய யானைகளில் களிறுகளுக்கு மட்டுமே நீளமான தந்தப் பற்கள் உள்ளன. பிடிகளுக்கு மிகச்சிறியதாகவோ அல்லது இல்லாமலே கூட இருக்கலாம். ஆசிய யானைத் தந்தப் பற்களின் நீளம் ஆப்பிரிக்க யானைகளை ஒத்திருந்தாலும் அவை சன்னமானவை.

யானையின் கோடுகள் மிகவும் மென்மையானது. அதனால் இவற்றைக் கீறி, செதுக்குவதற்கும் துருவுவதற்கும் வசதியாக இருப்பதால் சிற்பங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதால் தந்த விற்பனை தடை செய்யப் பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tusk". The Oxford English Dictionary. 2010.
  2. Konjevic, D.; Kierdorf, U.; Manojlovic, L.; Severin, K.; Janicki, Z.; Slavica A.; Reindl B.; Pivac; I. (4 April 2006). "The spectrum of tusk pathology in wild boar (Sus scrofa L.) from Croatia". Veterinarski Arhiv 76 (suppl.) (S91–S100). http://www.vef.hr/vetarhiv/papers/2006-76-7-12.pdf. பார்த்த நாள்: 9 January 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தப்_பல்&oldid=3891983" இலிருந்து மீள்விக்கப்பட்டது