ஐசோசிடேன்
ஐசோசிடேன் (Isocetane) என்பது C16H34 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2,2,4,4,6,8,8-எப்டாமெத்தில்நோனேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். அதிகமான கிளைச் சங்கிலிகள் கொண்ட இச்சேர்மத்தை டீசல் எரிபொருளின் சிடேன் எண்ணை உறுதிப்படுத்தும் குறைவு அடிப்படை எண்ணாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [2]. ஐசோசிடேனின் சிடேன் எண் 15 ஆகும். சிடேன் எண் பூச்சியமாகக் கணக்கிடப்பட்ட 1-மெத்தில்நாப்தலீனை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் அதிக விலை போன்ற காரணங்களால் ஐசோசிடேன் முக்கியத்துவம் பெறுகிறது [3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,2,4,4,6,8,8-எப்டாமெத்தில்நோனேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
4390-04-9 | |
ChEBI | CHEBI:131383 |
ChemSpider | 19228 |
EC number | 224-506-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | 2,2,4,4,6,8,8-எப்டாமெத்தில்நோனேன் |
பப்கெம் | 20414 |
| |
UNII | 918X1OUF1E |
பண்புகள் | |
C16H34 | |
வாய்ப்பாட்டு எடை | 226.45 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 793 மி.கி மி.லி−1 |
கொதிநிலை | 240.1 °C; 464.1 °F; 513.2 K |
ஆவியமுக்கம் | 130 பாசுக்கல் ( 20 °செல்சியசில்) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.439 |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 458.80 யூல் கெல்வின்−1 mol−1 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 96.00 °C (204.80 °F; 369.15 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வேதியியல் விதிமுறைகளின் படி ஐசோ என்ற முன்னொட்டோடு வழங்கப்படும் ஐசோசிடேன் எனப்படும் இச்சேர்மத்தின் பெயர் 2-மெத்தில்பெண்டாடெக்கேன் என்ற சேர்மத்திற்கே ஒதுக்கப்படவேண்டும். இருப்பினும், சிடேனின் முக்கியமான மாற்றியமான 2,2,4,4,6,8,8-எப்டாமெத்தில்நோனேன் சார்பாக வரலாற்றில் இப்பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "2,2,4,4,6,8,8-heptamethylnonane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
- ↑ New system offers faster, easier method for cetane measurement by Bill Siuru, Diesel Progress, North American Edition, March, 2002
- ↑ Cetane number