ஐசோபார்
ஐசோபார்கள் (isobar) அல்லது சமபாரங்கள் என்பவை ஒரே திணிவெண்ணைக் கொண்ட (A) ஆனால் வெவ்வேறு அணு எண்ணைக் (Z) கொண்ட தனிமங்களின் அணுக்களைக் குறிக்கும். இன்னொரு விதமாகக் கூறுவதென்றால் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகள், நொதுமிகளின் கூட்டுத்தொகை ஒன்றாக இருக்கும் வெவ்வேறு தனிமங்களை இந்த சமபாரங்கள் குறிக்கும்.எடுத்துக்காட்டாக 8O16 மற்றும் 7N16 அணுக்கருக்கள் இரு சமபாரங்களைக் குறிக்கும். சமபாரங்கள் வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள், எனவே அவற்றின் இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள் மாறுபட்டு அமையும்.
சமபாரங்களுக்கு எடுத்துக்காட்டுகள்: 40S, 40Cl, 40Ar, 40K, மற்றும் 40Ca. இவற்றின் அணுக்கள் அனைத்தும் 40 அணுக்கருனிகளைக் (nucleon) கொண்டுள்ளன, ஆனாலும் இவை வேறுபட்ட புரோத்தன்களையும் (நேர்மின்னிகளையும்), இலத்திரன்களையும் (எதிர்மின்னிகளையும்) கொண்டுள்ளன.
பெயர்க்காரணம்
தொகுஐசோபார் என்ற சொல் "ஐசோஸ்" (isos, "சமம்" மற்றும் "பாரோஸ்" (baros, "எடை") என்ற இரண்டு கிரேக்கச் சொற்களில் இருந்து பிறந்தது[1].