முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஐடியா(Idea) இந்தியாவில் உள்ள ஒரு நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இந்தியா முழுவதும் 22 மண்டலங்களில் முன்கட்டண மற்றும் பின்கட்டண இணைப்புகளை நகர்ப்பேசிகளுக்கு அளித்து வருகிறது மற்றும் கம்பியில்லா இணையச்சேவையும் அளிக்கிறது. சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஐடியா செல்லுலார் இந்தியாவில் மூன்றாம் இடத்தை பெற்ற நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமாகும். "ஒரு ஐடியா உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமே" என்பது இந்நிறுவனத்தின் விளம்பரச்சொல் ஆகும். ஐடியா செல்லுலார் சந்தை மதிப்பில் 16.36% பங்குகளையும், ஏப்ரல் 2015 நிலவரப்படி 159.20 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. வீடியோகான் மொபைல் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை இந்த நிறுவனம் 2015 நவம்பர் 25 ஆம் திகதி அன்று வாங்கியுள்ளது. [1]

வழங்கும் சேவைகள்தொகு

  • குரல் அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம் 2G, 3G, & 4G
  • மதிப்புக்கூட்டு சேவைகள்
  • ஐடியா மணி (2014) அறிமுகம்

சந்தாதாரர் விபரம்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடியா_செல்லுலார்&oldid=2154300" இருந்து மீள்விக்கப்பட்டது