ஐதராக்சி அசிட்டோன்

ஐதராக்சி அசிட்டோன் (Hydroxyacetone) என்பது C3H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிய ஐதராக்சி கீட்டோன் கட்டமைப்பிலுள்ள ஆல்பா ஐதராக்சி கீட்டோனான இச்சேர்மம் அசிட்டால் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அசிட்டோன் அமைப்பில் ஒரு முதனிலை ஆல்ககால் பதிலீடு செய்யப்பட்டால் அவ்வமைப்பு ஐதராக்சி அசிட்டோன் ஆகும்.

ஐதராக்சி அசிட்டோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-ஐதராக்சி-2-புரொப்பனோன்
வேறு பெயர்கள்
அசிட்டால்
இனங்காட்டிகள்
116-09-6
Beilstein Reference
605368
ChemSpider 21106125
EC number 204-124-8
InChI
  • InChI=1S/C3H6O2/c1-3(5)2-4/h4H,2H2,1H3
    Key: XLSMFKSTNGKWQX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • CC(=O)CO
பண்புகள்
C3H6O2
வாய்ப்பாட்டு எடை 74.08
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் இனிப்பு
அடர்த்தி 1.059 கி/செ.மீ3[1]
உருகுநிலை −17 °C (1 °F; 256 K)
கொதிநிலை 145–146 °C (293–295 °F; 418–419 K)
ஆவியமுக்கம் 7.5  பாசுக்கல் 20 °செல்சியசில்[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.415[1]
தீங்குகள்
H226[2]
தீப்பற்றும் வெப்பநிலை 56 °செல்சியசு - closed cup[2]
வெடிபொருள் வரம்புகள் Upper limit: 14.9%(V)
Lower limit: 3%(V)[2]
Lethal dose or concentration (LD, LC):
2200 மி.கி/கி.கி (எலி,வாய்வழி)[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பல்வேறு சர்க்கரைகளை படியிறக்க வினைக்கு உட்படுத்தி ஐதராக்சி அசிட்டோன் தயாரிக்கப்படுகிறது. மெயிலார்டு வினையின் வாயிலாக உணவு வகைகள் தயாரிக்கவும் மேலும் பல்வேறு நறுமணப் பொருட்களுடன் சேர்ந்து வினைபுரியவும் செய்து ஒரு நறுமணமூட்டியாகவும் இது உதவுகிறது[4].

வர்த்தகரீதியாக ஐதராக்சி அசிட்டோன் விற்கப்பட்டாலும் ஆய்வகங்களில் புரோமோ அசிட்டோனை பதிலீட்டு வினைக்கு உட்படுத்தி தயாரிக்கப்படுகிறது[5]. விரைவான பலபடியாக்கல் வினைக்கு ஆளாகி பகுதியசிட்டால் வளைய இருபடியாக உருவாகிறது. காரச்சூழலில் இது விரைவான ஆல்டால் குறுக்க வினைக்கு உட்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Nodzu, Ryuzaburo (1935). "On the Action of Phosphate Upon Hexoses. I. The Formation of Acetol From Glucose in Acidic Solution of Potassium Phosphate". Bulletin of the Chemical Society of Japan 10 (3): 122–130. doi:10.1246/bcsj.10.122. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1935_10_3/page/122. 
  2. 2.0 2.1 2.2 2.3 Sigma-Aldrich Co., Hydroxyacetone. Retrieved on 2 July 2015.
  3. Smyth Jr, HF; Carpenter, CP (January 1948). "Further experience with the range finding test in the industrial toxicology laboratory". The Journal of industrial hygiene and toxicology 30 (1): 63–8. பப்மெட்:18895731. 
  4. Nursten, Harry E. (1998). "The Mechanism of Formation of 3-Methylcyclopent-2-en-2-olone". in O'Brien, J.; Nursten, H.E.; Crabbe, M.J. et al.. The Maillard Reaction in Foods and Medicine. Elsevier. பக். 65–68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781845698447. 
  5. Levene, P. A.; Walti, A. (1930). "Acetol". Organic Syntheses 10: 1. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0005. ; Collective Volume, vol. 2, p. 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராக்சி_அசிட்டோன்&oldid=3520645" இலிருந்து மீள்விக்கப்பட்டது