ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை

ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை (Armenian cemetery in Hyderabad) உப்புகுடா ஆர்மீனியக் கல்லறை என்றும் அழைக்கப்படும் இது முந்நூறு ஆண்டுகள் பழமையான கல்லறையாகும். குதுப் ஷாஹி காலத்தைச் சேர்ந்த இது இந்தியாவின் தெலங்காணாவிலுள்ள ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியான உப்புகுடாவில் (முன்னாள் ஓபிகுடா) அமைந்துள்ளது. [1]

உப்புகுடா ஆர்மீனியக் கல்லறை
Details
Locationஉப்புகுடா, ஐதராபாத்து, தெலங்காணா
Countryஇந்தியா
Typeஆர்மீனியர்கள்
Owned byஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
Number of graves19

கல்லறை

தொகு

இந்த தளத்தில் ஆர்மீனியக் கல்லறைகளும் தேவாலயங்களும் உள்ளன. இந்த கல்லறையில் ரெவ் ஜோஹன்னஸ் (1680) மற்றும் ரெவ் சைமன் (1724) என்ற இரு திருத்தூதர்கள் உட்பட மொத்தம் 19 ஆர்மீனியர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்து நகரத்துடனான ஆர்மீனிய உறவின் கடைசி அறியப்பட்ட சுவடு இதுவாகும்.

ஐதராபாத்தில் கணிசமான அளவு ஆர்மீனியர்கள் வசித்து வந்துள்ளனர். ஐதராபாத்து ஆர்மீனியச் சமூகம் நிலைத்த திருத்தந்தையின் ஆணை ஓலையிலிருந்து எச்மியாட்சின் பேராலயத்தைப் பெற்றது. ஐதராபாத்தில் வசித்த டச்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் குறிப்பிட்டக் கல்லறை இல்லை என்பதால் இதைனை அவர்கள பகிர்ந்து கொண்டனர். [2][3][4]

பாதுகாப்பு

தொகு

இந்த ஆர்மீனிய கல்லறை , இந்திய தொல்பொருள் தளங்களின் கீழ் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருக்கிறது. குடியிருப்பாளர்களாலும், இதற்கு பொறுப்பான துறையின் அலட்சியம் காரணமாக இது கிட்டத்தட்ட அழிக்கப்படும் விளிம்பில் உள்ளது. [2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 28 May 2018. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. 2.0 2.1 "Armenian cemetery in dire straits". தி இந்து. 28 March 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article3252478.ece?css=print. பார்த்த நாள்: 1 May 2012. 
  3. 3.0 3.1 "High on hobbies: A society chronicles history in its own way". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 May 2012 இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126043730/http://articles.timesofindia.indiatimes.com/2012-05-01/hyderabad/31526588_1_hobbies-notes-collection. பார்த்த நாள்: 1 May 2012. 
  4. 4.0 4.1 "In India, Historic Armenian Cemetery Buried Under Waste". Asbarez. 17 April 2009. http://asbarez.com/61226/in-india-historic-armenian-cemetery-buried-under-waste-2/. பார்த்த நாள்: 1 May 2012. 

வெளி இணைப்புகள்

தொகு
The cemetery Image.
The current condition of cemetery, Image.
Book source
Armenian settlement in India