ஐந்து எஸ் (5S) அல்லது ஐந்து சகர கோட்பாடு என்பது பணித்தள அல்லது பணியிட அமைப்பு முறையைக் குறிப்பதாகும். இது ஜப்பானியர்களால் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானியப் பொருள்கள், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.

பெயர்க் காரணம்

தொகு

ஐந்து எஸ் அல்லது ஐந்து சகரம், பின்வரும் ஐந்து ஜப்பானிய சொற்களின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதி இணைத்த ஒரு குறுஞ்சொல்.

  • முதல் எஸ்: செய்றி - சீர்பிரித்தல் - வகைப்படுத்து (Sort)
  • இரண்டாவது எஸ்: செய்டன் - சீரொழுங்கு - நிலைப்படுத்து (Set in order)
  • மூன்றாவது எஸ்: செய்ச்சோ - சுத்தம் - சுத்தம்செய்தல்(Shine)
  • நான்காவது எஸ்: செய்கெட்சு - செந்தரம் - தரப்படுத்து (Standardize)
  • ஐந்தாவது எஸ்: ஷிட்சுகே - செவ்வொழுக்கம் - நீடிக்கச்செய் (Sustain)

இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குப்படுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும். தற்போது செங்காப்பு (Safety) என்பது ஆறாவது சகரமாக கருத்தில் கொள்ளப்படுகிறது.

சீர்பிரித்தல்/ செய்றி

தொகு

இது பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றுள் தேவையானவற்றைத் திரட்டி தேவையற்றவற்றை அப்புறப்படுத்தும் செயலைக் குறிக்கும் சொல்.

சீரொழுங்கு / செய்டன்

தொகு

இது பொருட்களுக்குரிய இடத்தையும், இடத்துக்குரிய பொருட்களையும் தேர்ந்தெடுத்து, பெயர்க்குறியிட்டு பராமரிக்கும் செயலைக் குறிப்பதாகும். இச்செயல் ஒவ்வொரு பணியையும் எளிமைப்படுத்துவதைக் குறிகோளாகக் கொண்டுள்ளது.

சுத்தம் / செய்சோ

தொகு

இது பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை குறிக்கும் சொல். பணித்தொடக்கத்திலும், பணிமுடிவிலும் பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை வழக்கபடுத்திக் கொள்வதை வற்புறுத்தும் சொல்லாகவும் இது அமைகிறது. அசுத்தமான பொருட்களை சுத்தம் செய்யும் போது பொருட்களின் தரக்குறைபாடுகள் இருக்குமே எனில் அவற்றை வெளிப்படுத்தவும், குறை நீக்கவும் முடிகிறது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் மட்டுமே சென்றடைகிறது.

செந்தரம் / செய்கெட்சு

தொகு

இது முன் சொல்லப்பட்ட மூன்று செயல்களை வரையறுக்கப்பட்ட வழிமுறையில் செய்வதைக் குறிக்கும் சொல். இந்த வரையறைகள் பொறுப்புகள், பொறுப்பாளர்கள், செய்முறைகள், செய்கருவிகள் இவையனைத்தையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும்.

செவ்வொழுக்கம் / ஷிட்சுகே

தொகு

இது முன் சொல்லப்பட்ட நான்கு செயல்களையும் தொடர்ச்சியாகவும் தொய்வில்லாமலும் தன்னொழுக்கத்துடனும் செய்வதைக் குறிப்பதாகும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்து_எஸ்&oldid=3608730" இலிருந்து மீள்விக்கப்பட்டது