ஐந்து பந்து

ஐந்து-பந்து என்னும் விளையாட்டை அஞ்சுபந்து என்றும் கூறுவர்.

கட்டைப் பருந்து - பாட்டுடன் ஆடப்படும் அடி-விளையாட்டு
காது குடையுது - பாட்டுடன் ஆடப்படும் அடி-விளையாட்டு

இது பந்தாட்டம் அன்று. பட்டவர் மற்றவர் கையில் அடிக்கும் இருவர் ஆட்டம்.

இரண்டு வகை
  1. பட்டவர் கைகளைக் கூப்பி முன்னே நீட்டுவார். மற்றவர் தன் பாட்டின் முடிவில் நீட்டிய கைகளில் அடிப்பார். நீட்டியவர் அடிபடாமல் 5 முறை தன் கையைப் பின்வாங்கிக்கொண்டால் நீட்டியவர் அடிக்கலாம். இப்படி இது மகிழ்ச்சியாக விளையாடப்படும்.
  2. பழமேறியவரின் துடைகளில் பட்டவரைப் கைவைக்கச்சொல்லி அடிப்பது

அடிக்கும்போது அடிப்பவர் பாடும் பாட்டு

தொகு
கட்டைப் பருந்து வந்து உன் கண்ணைச் சுடுது பார்
சுடுது பார் (இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்வர்)

எதிராளி சோரும்போது சட்டென்று சொல்லிவிட்டு அடிப்பர்.
அடித்துவிட்டால் மீண்டும் ஐந்து முறை அடிக்கலாம்.
ஐந்து தொடர் முறையில் அடிக்க முடியாவிட்டால் ஆட்டம் கை மாறும்.

வேறு பாடலுடன் வேறு முறை
காது குடையுது... காது குடையுது ... (எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்வர்)

எதிராளி சோரும்போது சட்டென்று சொல்லிவிட்டு அடிப்பர்.
அடித்துவிட்டால் மீண்டும் ஐந்து முறை அடிக்கலாம்.
ஐந்து தொடர் முறையில் அடிக்க முடியாவிட்டால் ஆட்டம் கை மாறும்.

பழமேறியவர் அடிப்பது, பட்டவர் தப்புவது என்ற முறையில் விளையாடப்படும் கூர்மைத்திற விளையாட்டு (Agility Game) இது.

காட்சியகம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்து_பந்து&oldid=1575894" இலிருந்து மீள்விக்கப்பட்டது