ஐபாட் 4
ஐபாட் 4 (iPad 4) என்பது ஆப்பிள் இன்க் நிறுவனத்தினால் தயாரித்து விற்பனை செய்யப்படும் நான்காம் தலைமுறை கைக் கணினி ஆகும். ஐபாட் மூன்றாம் தலைமுறையை போன்றே ரெடினா திரையை கொண்டுள்ளது. ஆனால் இது ஆப்பிள் ஏ 6 எக்ஸ் சில்லு மற்றும் லைட்னிங் இணைப்பு போன்ற புதிய மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளது. ஐபாட் நான்காம் தலைமுறை கைக் கணனி ஐஓஎஸ் 6 இயங்குதள பதிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதனால் ஐஓஎஸ் 6, 7, 8, 9, 10 ஆகிய ஐந்து இயங்குதள பதிப்புக்கள் ஆதரிக்கப்படுகின்றன.
இந்த சாதனம் கருப்பு அல்லது வெள்ளை முன் வண்ணங்களுடனும், 16 ஜிபி , 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி மாறுப்பட்ட சேமிப்புத் திறன்களுடனும், ஒய்-பை மட்டும் அல்லது ஒய்-பை + செல்லிடம் ஆகிய மாறுப்பட்ட இணைப்பு விருப்பங்களுடனும் கிடைக்கின்றது.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று ஐபாட் வரிசையின் நான்காவது தலைமுறை வெளியிடப்பட இருப்பதாக ஊடக மாநாட்டொன்றில் அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று 35 நாடுகளில் வெளியிடப்பட்டது. பின்னர் திசம்பர் வரை சீனா, இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பத்து நாடுகளில் வெளியிடப்பட்டது. ஐபாட் 4 இன் அறிவிப்பைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறை ஐபாட் 3 வெளிவருவது நிறுத்தப்பட்டது.[1]
நான்காவது தலைமுறை ஐபாட் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் அதன் வன்பொருள் மேம்பாடுகளுக்காகவும் ரெடினா திரைக்காகவும் பாராட்டப்பட்டது.
வரலாறு
தொகுகலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள கலிபோர்னியா தியேட்டரில் அக்டோபர் 23 ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஊடக நிகழ்வொன்றை ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. ஊடக நிகழ்வில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஐபாட் 4 , ஐபாட் மினி ஆகியவற்றை வெளியிட்டை பற்றி அறிவிக்க முன்பு ஐ-புத்தகத்தின் புதிய பதிப்பையும், மேக்புக் ப்ரோ , மேக் மினி மற்றும் ஐமாக் ஆகியவற்றின் புதிய தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தினார்.[2] அறிமுகத்தின் போது ஆப்பிள் நான்காவது தலைமுறை ஐபாட் அக்டோபர் 26 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நாடுகளில் இணையத்தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய முடியும் என அறிவித்தது.[3]
2012 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று ஐபாட் நான்காம் தலைமுறை ஆப்பிள் சாதனத்தின் ஒய்-பை மாதிரி ஐரோப்பா, கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்கா முழுவதுமான 35 நாடுகளில் வெளியிடப்பட்டது. ஆரம்ப வெளியீட்டிற்கு சில வாரங்களுக்குப் பிறகு செல்லிட இணைப்புகளைக் கொண்ட வர்த்தக நிலையங்களில் வெளியிடப்பட்டது.[3]
2013 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று ஐபாட் ஏர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நான்காம் தலைமுறை ஐபாட் விற்பனை நிறுத்தப்பட்டது.[4] 2014 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று ஐபாட் 2 நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஐபாட் 4 மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.[5] 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று ஐபாட் ஏர் 2 க்கு ஆதரவாக நான்காம் தலைமுறை ஐபாட் வெளிவருவது நிறுத்தப்பட்டது.
வரவேற்பு
தொகுநான்காம் தலைமுறை ஐபாட் விமர்சகர்களிடம் இருந்தும், வர்ணனையாளர்களிடமிருந்தும் சாதகமான விமர்சனங்களைப் பெற்றது.
ஐபாட் மினி, ஐபாட் 4 என்பவற்றின் முதல் வார இறுதி விற்பனை 3 மில்லியன் ஆகும்.[6]
சான்றுகள்
தொகு- ↑ D'Orazio, Dante (2012-10-23). "3rd Generation iPad discontinued, refurbished models available starting at $379". The Verge (in ஆங்கிலம்). Retrieved 2019-11-11.
- ↑ "Apple debuts iPad mini tablet". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-10-23. Retrieved 2019-11-11.
- ↑ 3.0 3.1 "Apple Introduces iPad mini". Apple Newsroom (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-11-11.
- ↑ Pachal, Pete. "Apple Unveils iPad Air". Mashable (in ஆங்கிலம்). Retrieved 2019-11-11.
- ↑ "Apple kills iPad 2 in favor of 4th-gen Retina display model". Engadget (in ஆங்கிலம்). Retrieved 2019-11-11.
- ↑ Tablets, Kate Solomon 2012-11-05T15:00:00 309Z. "Apple boasts 3 million sales for iPad mini, iPad 4". TechRadar (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2019-11-11.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)