ஐரோப்பிய முயல்
ஐரோப்பிய முயல் (ஆங்கிலப்பெயர்: European Hare, உயிரியல் பெயர்: Lepus europaeus) அல்லது பழுப்பு முயல் என்பது ஐரோப்பா மற்றும் சில ஆசியப் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட ஒரு முயல் இனம் ஆகும். முயல் இனங்களிலேயே இது ஒரு பெரிய இனமாகும். இது மிதமான வெப்பநிலை மற்றும் திறந்த வெளிகளுக்கு ஏற்ப தகவமைந்துள்ளது. இவை தாவர உண்ணிகள் ஆகும். பொதுவாக புல் மற்றும் மூலிகைகளை உண்கின்றன. மேலும் இவை குறிப்பாக குளிர்காலத்தில் கிளைகள், மொட்டுக்கள், பட்டைகள் மற்றும் பயிர்களை உண்கின்றன. கொன்றுண்ணி பறவைகள், நாய் மற்றும் பூனை குடும்ப விலங்குகள் ஆகியவை இவற்றை வேட்டையாடுகின்றன. வேட்டை விலங்குகளிடம் இருந்து தப்பிக்க இவை வேகமாக நீண்ட தூரம் ஓடும் பண்பை நம்பியுள்ளன. இவற்றிற்கு நீளமான சக்தி வாய்ந்த காதுகள் மற்றும் பெரிய மூக்குகள் உள்ளன.
ஐரோப்பிய முயல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. europaeus
|
இருசொற் பெயரீடு | |
Lepus europaeus பல்லார், 1778 | |
ஐரோப்பிய முயல் பரவல் (கருஞ்சிவப்பு - பூர்வீகம், சிவப்பு- அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள்) |
உசாத்துணை
தொகு- ↑ Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus europaeus". செம்பட்டியல் 2008: e.T41280A10430693. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41280A10430693.en. http://oldredlist.iucnredlist.org/details/41280/0. பார்த்த நாள்: 23 December 2017.