ஐரோவாசிய புள்ளிக்குருவி

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Jynx|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

ஐரோவாசிய புள்ளிக்குருவி (Eurasian wryneck அல்லது Northern wryneck) என்பது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை புள்ளிக்குருவி ஆகும்.[2] இவை முதன்மையாக ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மிதவெப்பமண்டல் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. பெரும்பாலான பறவைகள் குளிர்காலத்தில் வலசை போகின்றன. அவ்வாறு இவை வெப்பமண்டல ஆபிரிக்காவிலும், தெற்காசியாவிலும் ஈரானில் இருந்து இந்திய துணைக்கண்டத்திற்கு வலசை வருகின்றன. ஆனால் சில பறவைகள் வடமேற்கு ஆபிரிக்காவில் வசிக்கின்றன. இவை திறந்த வெளி, வனப்பகுதிப் பகுதி, பழத்தோட்டங்களில் வாழும் பறவையாகும்.

ஐரோவாசிய புள்ளிக்குருவி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Jynx
இனம்:
இருசொற் பெயரீடு
Jynx torquilla
(லின்னேயஸ், 1758)
Subspecies

See text

Range map for Eurasian wryneck
     Summer      Resident      Winter

ஐரோவாசிய புள்ளிக்குருவி சுமார் 16.5 cm (6.5 அங்) நீளம் இருக்கும். இதன் அலகு மற்ற மரங்கொத்திகளை விட குட்டையாக குத்துவாள் போன்று இருக்கும். இவற்றின் மேல்பகுதி கருஞ்சாம்பல் பழுப்பு நிறமாய் அதில் பழுப்பு நிறப்பட்டைகளுடும் மென்கோடுகளோடும் காட்சியளிக்கும். இவற்றின் அடிப்பகுதி பாலேடு நிறத்திலும் பழுப்பு நிற புள்ளிகளுடன் இருக்கும். இவை காய்ந்த மரத்தில் அல்லது தரையில் காணப்படும் காணப்படும் எறும்புகள் மற்றும் பிற பூச்சிகளை இரையாக கொள்கிறது. இவை மரப் பொந்துகளில் கூடு கட்டுகின்றன. மே மற்றும் சூன் மாதங்களில் ஏழு முதல் பத்து வரையில் வெள்ளை முட்டைகளை இடுகின்றன.

இந்த பறவைகள் தங்கள் தலையை கிட்டத்தட்ட 180 பாகை வரை திருப்பும் திறனால் wryneck (பொருள்: திருகுக்கழுத்து) என்னும் ஆங்கிலப் பெயரைப் பெற்றுள்ளன. கூட்டில் தொந்தரவு ஏற்படும் போது, இவை பாம்பு போன்று தலையை முறுக்கி சீறி அச்சுறுத்துகின்றன. இந்த வித்தியாசமான நடத்தை இவற்றை மாந்திரீகத்தில் பயன்படுத்த வழிவகுத்தது. இதைக்கொண்டு ஒருவருக்கு " செய்வினை" செய்யும் பழக்கம் உள்ளது.

ஐரோவாசிய புள்ளிக்குருவியில் ஆறு துணையினங்கள் உள்ளன:[3]

  • ஜின்க்ஸ் டார்குவில்லா சினென்சிஸ் ஹெஸ்ஸி, 1911
  • ஜின்க்ஸ் டார்குல்லா ஹிமாலயனா வூரி, 1959
  • ஜின்க்ஸ் டார்குவிலா மௌரேட்டானிகா ரோத்ஸ்சைல்ட், 1909
  • ஜின்க்ஸ் டார்குவில்லா சாருட்னி லூடன், 1912
  • தர்கியா புள்ளிக்குருவி ஜின்க்ஸ் டார்குவிலா டார்குல்லா லின்னேயஸ், 1758
  • ஜின்க்ஸ் டார்குல்லா ட்சுசி ஓ. க்ளீன்ஸ்மிட், 1907

விளக்கம்

தொகு
 
நார்வேயில்

ஐரோவாசிய புள்ளிக்குருவி சுமார் 17 cm (6.7 அங்) நீளம் வரை வளரும்.[4] ஜின்க்ஸ் டார்குவிலா ட்சுசி என்ற கிளையினம் 26 முதல் 50 g (0.92 முதல் 1.76 oz) எடையுள்ளதாக உள்ளது.[5] இது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும் மரங்கொத்தியைப் போல்லலாமல் பூங்குருவி போன்ற உடல் வடிவத்துடன் மெலிதான, நீளமான உடல் தோற்றமுடைய ஒரு பறவையாகும். இதன் மேல்பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் அதில் செம்பழுப்பு மற்றும் கருப்பு நிற பட்டைகளுடும் மென் கோடுகளுடனும் காட்சியளிக்கும். இதன் பிட்டம் மற்றும் மேல் வால் போர்வை இறகுகளில் சாம்பல் நிறப் புள்ளிகளும், பழுப்புக் கறைகளும் காணப்படும். இதன் வால் வட்டமாக சாம்பல் நிறத்தில் இருக்கும். அதில் பழுப்பு நிற புள்ளிகளுடன், சாம்பல்-பழுப்பு நிற மங்கலான பட்டைகள் மற்றும் கரும்பழுப்பு நிறத்தில் அமைந்த சில தெளிவான பட்டைகள் இருக்கும். கன்னம், தொண்டை ஆகியன பழுப்பு நிறப் பட்டைகளோடு காணப்படும். உடலின் அடிப்பகுதி பாலேட்டு வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற கறைகளுடன் அம்புத் தலைகள் போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது, அவை கீழ் மார்பகம் மற்றும் வயிற்றில் புள்ளிகளாக மாறுகின்றன. அலகு பழுப்பு நிறமாகவும், நீளமாகவும், மெல்லியதாகவும் அகலமான அடித்தளமுடன் கூர்மையான நுனி கொண்டதாக இருக்கும். விழிப்படலம் பழுப்பு நிறமாகவும், மெல்லிய கால்களும், பாதங்களும் வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும். கால்களில் முதல் மற்றும் இரண்டாம் கால்விரல்கள் மற்ற விரல்களை விட குட்டையாக இருக்கும். முதல், நான்காவது கால்விரல்கள் பின்னோக்கியதாகவும், இரண்டாவது, மூன்றாவது கால்விரல்கள் முன்னோக்கியதாகவும், செங்குத்து பரப்புகளை பிடித்துக்கொண்டு ஒட்டி நிற்க ஏற்ற ஒரு நல்ல அமைப்பாக உள்ளது.[4] இளம் பறவைகள் முதிர்ந்த பறவைகளைப் போலவே உள்ள என்றாலும், லேசான மற்றும் குறைவான தனித்துவமான நிறத்துடன் உள்ளன.[6]

ஒரு ஐரோவாசிய புள்ளிக்குருவி அழைப்புகளை மேற்கொள்கிறது

ஐரோவாசிய புள்ளிக்குருவியின் அழைப்பு பல வினாடிகள் கடுமையானதாக நீடிக்கும்.[4]

நடத்தை

தொகு

குளிர் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து இவை வலசை வரும் இவை தனித்தோ இணையாகவோ திரியக்கூடியன. மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்தவை என்றாலும் இவை தரையிலும் இரைதேடக்கூடியன. மரங்களில் இரை தேடும்போது மரங்கொத்திகளைப் போல கிளைகளில் நெடுக்குவாக்கில் தொங்குவதோடு, குருவிகளைப் போலக் குறுக்குவாக்கில் சிறிசிமிர்களில் அமர்ந்திருக்க காண இயலும். மரப்பட்டைகளிடையே உள்ள புழுபூச்சிகள், எறும்புகள் ஆகியவற்றை பிடித்தாலும் மரங்கொத்தியைப் போல அலகால் மரத்தை தட்டும் பழக்கம் இல்லாதது. தரையில் இரை தேடும்போது கரிக்குருவியைப் போல வாலை நிமிர்த்திக் கொள்ளும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Jynx torquilla". IUCN Red List of Threatened Species 2017: e.T22680683A111819000. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22680683A111819000.en. https://www.iucnredlist.org/species/22680683/111819000. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Winkler, H., Christie, D. A. & Kirwan, G. M. (2019).
  3. Lepage, Denis. "Eurasian Wryneck (Jynx torquilla) Linnaeus, 1758". Avibase. பார்க்கப்பட்ட நாள் 2013-08-06.
  4. 4.0 4.1 4.2 Witherby, H. F., ed. (1943). Handbook of British Birds, Volume 2: Warblers to Owls. H. F. and G. Witherby Ltd. pp. 292–296.
  5. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor).
  6. "Jynx torquilla". July 2015.

வெளி இணைப்புகள்

தொகு