ஒசூர் கே. அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம்
கே. அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் என்பது ஒசூரில் உள்ள பேருந்து நிலையமாகும். இது தேசிய நெடுஞ்சாலை 7 இல் அமைந்துள்ளது.
கே. அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் | |
---|---|
பேருந்து நிலையத்தின் உட்பகுதி | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 7 ஒசூர், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு. அஞ்சல் குறியீட்டு எண் 635109. இந்தியா |
உரிமம் | ஒசூர் நகராட்சி |
இயக்குபவர் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | TRI (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்) TRH (கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழகம்) |
வரலாறு
தொகுஒசூர் பேரூராட்சியாக இருந்த காலத்தில் 1980களின் துவக்கத்தில் இந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ஒசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பேரூராட்சித் தலைவரான கே. அப்பாவு பிள்ளை அவர்களின் பெயர் வைக்கப்பட்டது. பேருந்து நிலையம் அமைந்துள்ள சாலை நான்கு வழி சாலையானதாலும் பேருந்து நிலையம் காலவாட்டத்தில் சேதமான காரணத்தால் இதே இடத்தில் புதியதாக பேருந்து நிலையத்தை 6. 80 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு 2007 ஆகத்து 31 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 10.5 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டு 2010 சூலை 18 அன்று மு. க. ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்கும் அப்பாவு பிள்ளை பெயரே வைக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் 53 பேருந்து விரிகுடாக்களுடன் கூடிய நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது இதில் தரை தளத்தில் 48 கடைகள் மற்றும் முதல் தளத்தில் 28 கடைகளுடன் கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு பேரறிஞர் அண்ணா வணிக வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
கண்ணோட்டம்
தொகுமாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒசூருக்கு இப்பேருந்து நிலையம் ஒரு முக்கியமான போக்குவரத்து புள்ளியாக உள்ளது. இது ஒசூர் நகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கிருந்து தினந்தோறும் 2,000 பேருந்துகள் இயக்கபடுகின்றன. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என வந்து செல்கின்றன.[1]
சேவைகள்
தொகுசுற்றுப்புறங்களுக்கு செல்லும் உள்ளூர் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் குறிப்பிட்ட கால இடைவேளையில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. குறிப்பாக பெங்களூருக்கு அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படுகின்றன, பெங்களூர் பேருந்துகள் வந்து செல்ல பேருந்தின் முன்பகுதியில் தனியாக அரைவட்டமாக தனிப்பகுதி உள்ளது.. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கர்நாடக, கேரள, ஆந்திர அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "ஒசூர் பேருந்து நிலையத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு". http://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/osoor+berunthu+nilaiyathil+kudineerth+tattuppadu-newsid-51259285. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=