ஒடிசா மாநில அருங்காட்சியகம்
ஒடிசா மாநில அருங்காட்சியகம் (Odisha State Museum) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேசுவரத்தில் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தின் அசல் வடிவம் 1932 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் 1960 ஆம் ஆண்டு தற்போதைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. [1] தொல்பொருளியல், கல்வெட்டியல், நாணயவியல், படைக்கலங்கள், சுரங்கத் தொழில் & நிலவியல், இயற்கை வரலாறு, கலை மற்றும் கைவினை, தற்கால கலை, பாரம்பரிய பட்டா ஓவியம், மானிடவியல் மற்றும் பனை ஓலை சுவடிகள் என அருங்காட்சியகம் பதினொரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது . [1] மேற்பார்வையாளர் ஒருவர் தலைமையில் அருங்காட்சியகத்தின் நிர்வாக கட்டுப்பாடு ஒடிசா அரசாங்கத்தின் கலாச்சார விவகாரத் துறையின் கைகளில் உள்ளது.
ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ସଂଗ୍ରହାଳୟ | |
அருங்காட்சியக நுழைவாயில் | |
நிறுவப்பட்டது | 1932 |
---|---|
அமைவிடம் | புவனேசுவரம், இந்தியா |
ஆள்கூற்று | 20°15′22″N 85°50′29″E / 20.2562°N 85.8415°E |
இயக்குனர் | மஞ்சுசிறீ சமந்தராய் |
உரிமையாளர் | ஒடிசா அரசு |
வலைத்தளம் | odishamuseum |
வரலாறு
தொகுஇந்த அருங்காட்சியகத்தின் தோற்றம் 1932 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. வில்லியம் இயோன்சு, ஞானசியாம் தாசு, என்சி பானர்சி , அரேகிருட்டிணா மகதாப் போன்ற சில வரலாற்றாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கட்டாக்கின் ராவென்சா கல்லூரியில் ஒரு அருங்காட்சியகத்தை நிறுவினர். 1945-46 ஆம் ஆண்டில் அருங்காட்சியகம் பழைய புவனேசுவரில் உள்ள பிரம்மானந்தா கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஒடிசா அரசாங்கத்தால் மாநில அருங்காட்சியகத்தின் தகுதிநிலையும் அதற்கு வழங்கப்பட்டது. [1] பின்னர், அருங்காட்சியகம் 1950 ஆம் ஆண்டில் பட்டேல் அரங்கிற்கும் மீண்டும் புவனேசுவரில் உள்ள அலகு-1 என்ற மற்றொரு கட்டிடத்திற்கும் மாற்றப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராசேந்திர பிரசாத் அவர்களால் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, இறுதியாக தற்போதைய கட்டிடத்தில் உள்ள அருங்காட்சியகம் 1960 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. [1]
காட்சியகங்கள்
தொகு- தொல்லியல்
- சமகால கலை
- கல்வெட்டு
- நாணயவியல்
- ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்
- கலை மற்றும் கைவினை
- சுரங்க மற்றும் புவியியல்
- மானுடவியல்
- சமசுகிருத கையெழுத்துப் பிரதி
- பட்டா ஓவியம்
நேரங்கள்
தொகுதிறக்கும் நேரம் திங்கள் தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
புகைப்படம் எடுத்தல்
தொகுஅருங்காட்சியகத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்காக அனுமதிச் சீட்டு எடுக்கும்போது முன் அனுமதி பெற வேண்டும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Patel, C.B.. "Origin and evolution of Orissa State Museum". OHRJ XLVII (3). http://orissa.gov.in/e-magazine/Journal/journalvol3/pdf/origin%26evolution.pdf. பார்த்த நாள்: 11 March 2013.Patel, C.B. "Origin and evolution of Orissa State Museum" (PDF). OHRJ. XLVII (3). Retrieved 11 March 2013.
புற இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ தளம்
- ஒடிசா சுற்றுலா மேம்படுத்தல்கள் பரணிடப்பட்டது 2019-02-17 at the வந்தவழி இயந்திரம்