ஒட்டலிவிளை
ஒட்டலிவிளை (Ottalivilai) என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் ஓர் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் முன்னோர்கள் பெரும் நிலக்கிழார்கள் ஆவர். இந்த கிராம மக்களின் முக்கிய வேலை விவசாயம். இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். பெண்கள் முதன்மையாக செவிலியப் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒட்டலிவிளை கிராமத்திற்கு அருகிலுள்ள சிற்றூர்கள் செங்கோடி, முதலாறு. மாத்தூரிலிருந்து வரும் பட்டணம் கால்வாய் இந்த கிராமத்தின் வழியாக செல்கிறது.
ஒட்டலிவிளை | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°18′59″N 77°17′55″E / 8.3164°N 77.2987°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 500 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பெயர் காரணம்
தொகுஇந்தக் கிராமத்தின் பெயர் "ஓட்டல்" என்பதிலிருந்து உருவானது. அதாவது ஓட்டல் என்பது "குளம்" ஆகும். 'இந்த கிராமம் குளத்தை சுற்றி அமைந்துள்ளது. "விளை" என்றால் விவசாய நிலம். எனவே, அதற்கு இந்தப் பெயர் வந்தது.
இனம் & சமயம்
தொகுஇவ்வூர் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சாம்பவர் சமூகத்தை சார்ந்தவர்கள்.
வழிபாட்டு தலம்
தொகுஇந்த ஊரின் நடுவே இரட்சணிய சேனை ஆலயம் அமைந்துள்ளது.[1]
மக்கள்தொகை
தொகுஇவ்வூரில் தோராயமாக 500 பேர் வசித்து வருகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "-如皋虏谏幕汽车服务有限公司". Archived from the original on 2017-09-05. பார்க்கப்பட்ட நாள் 2022-07-05.