ஒத்த செருப்பு

ஓத்த செருப்பு அளவு 7 (Oththa Seruppu Size 7) என்பது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் வெளிவந்துள்ள, இந்திய தமிழ் மொழி உளவியல் படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர். பார்த்திபன் தயாரித்து,எழுதி இயக்கியுள்ளார்.[1] [2] இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே தனிக்கதாபாத்திரமாக நடித்துள்ளார். பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யா என்பவரும் ஒரு பாடலுக்கு மட்டும் இசையை சந்தோஷ் நாராயணனும் செய்துள்ளனர்.[3][4] இந்த படத்தை பார்த்திபன் தனது தயாரிப்பு நிறுவனமான, பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்துள்ளார். ஒரு நபரே திரைப்பத்தை எழுதி, இயக்கி, நடித்து தயாரித்ததற்காக இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.[5][6][7][8] இத்திரைப்படம் 30 ஆகத்து 2019 அன்று சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. [9] [10] இந்த படம் 20 செப்டம்பர் 2019 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது, அதை மதிப்பாய்வு செய்த சென்னை விஷன், ஒத்த செருப்பு அளவு 7 இந்திய சினிமாவில் ஒரு அரிய முயற்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த திரைப்படம் ஆர். பார்த்திபன் என்ற ஒரே ஒரு மனிதரால் எழுதி, இயக்கி, நடித்து, தயாரிக்கப்பட்டது[11].

ஒத்த செருப்பு அளவு 7
சுவரிதழ்
இயக்கம்இரா. பார்த்திபன்
கதைஆர். பார்த்திபன்
இசை
நடிப்புஆர். பார்த்திபன்
ஒளிப்பதிவுராம்ஜி
படத்தொகுப்புஆர். சுதர்சன்
கலையகம்பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ்
வெளியீடு1 செப்டம்பர் 2019 (2019-09-01)(சிங்கப்பூர் தெற்காசியத் திரைப்படத் திருவிழா)
20 செப்டம்பர் 2019 (இந்தியா)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்தொகு

ஒரு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மன்றத்தின் காவலாளியாக வேலை பார்க்கும் நடுத்தர வயது மனிதன் மாசிலாமணி ஒரு கொலைக்குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டு விசாரணையில் உள்ளார். அவரது நோயுற்ற மகன் விசாரணை அறைக்கு வெளியில் காத்திருக்கிறார். திரையில் தெரியும் ஒரே ஒரு நடிகர் அவர் மட்டுமே. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் அவருடன் இடைவினை புரிபவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ள குரல்கள் மட்டுமே. அவர் தன் முன்னே கிடக்கும் புதிர்களுக்கு விடை கூறும் பாணியில் முன்னும் பின்னுமாக கதையை விசாரணையில் உள்ள காவலருக்கும், திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் விவரிக்கிறார். இது இரா. பார்த்திபனின் மிகவும் வித்தியாசமான முயற்சியாக விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

திரைக்கு வரும் முன்தொகு

இப்படத்தின் முன்னோட்டமானது 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[8] இத்திரைப்படம் சிங்கப்பூர், தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது.[12][13]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்த_செருப்பு&oldid=3050784" இருந்து மீள்விக்கப்பட்டது