ஒன்பது தூண் பள்ளிவாசல்

வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல்

ஒன்பது தூண் மசூதி ( Nine Dome Mosque ) என்பது பங்களாதேஷில் உள்ள பாகர்ஹாட் மசூதி நகரத்தில் உள்ள ஒரு வரலாற்று பள்ளிவாசலாகும்.. இது 15 ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தின் ஆட்சியின் கீழ் கான் ஜகான் அலியின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.[1] 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஒன்பது தூண் பள்ளிவாசல் தாகூர் திகி குளத்தின் மேற்கில் அமைந்துள்ளது. இது கான் ஜகான் அலியின் கல்லறைக்கு அருகில் உள்ளது. அதன் மேற்கு சுவர் மரபுவழியாக மேற்கு நோக்கி மக்காவை நோக்கி உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு அருகில் ஜிந்தா பிர் பள்ளிவாசல் மற்றும் கல்லறை ஆகியவை இடிந்து கிடக்கின்றன.

ஒன்பது தூண் பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பேகர்காட்டின் பள்ளி வாசல் நகரம், பேகர்காட் மாவட்டம், வங்காளதேசம்
புவியியல் ஆள்கூறுகள்22°39′30.6″N 89°45′19.3″E / 22.658500°N 89.755361°E / 22.658500; 89.755361
சமயம்சுன்னி இசுலாம்

மேற்கு சுவர்களில் அமைந்துள்ள மிஹ்ராப்பைச் சுற்றி சுடுமண்ணால் செய்யப்பட்ட மலர் சுருள்கள் மற்றும் மலர் உருவங்கள் ஆகியவை அலங்காரங்களாக இவைக்கப்பட்டுள்ளன. நான்கு மூலைகளிலும் வட்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசலின் சுவர்கள் ஒரு பெரிய மையக் குவிமாடத்தைத் தாங்கி நிற்கின்றன. அதைச் சுற்றி எட்டு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இந்த அமைப்புகம் சல்பேட்டால் பாதிக்கப்பட்டது. பின்னர் அது கணிசமாக மீட்டெடுக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Bari, MA (2012). "Nine-Dome Mosque". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்பது_தூண்_பள்ளிவாசல்&oldid=3847002" இலிருந்து மீள்விக்கப்பட்டது