மிஹ்ராப்

மிஹ்ராப் (அரபு மொழி: محرابmiḥrāb,. محاريب maḥārīb) அல்லது திசை மாடங்கள் என்பது கிப்லாவைக் குறிப்பதற்காக பள்ளிவாசல் சுவரில் கட்டப்பட்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இது முஸ்லிம்கள் தொழும் திசையான மக்காவிலுள்ள கஃபாவை நோக்கியதாக அமைந்திருக்கும்.

சுல்தான் இப்ராஹிம் பள்ளிவாயலிலுள்ள(கிரேக்கம்) மிஹ்ராப்
'மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்' (Metropolitan Museum of Art) இலுள்ள மிஹ்ராப்


மிஹ்ராப் ஐ மிம்பர் உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். மிம்பரானது இமாம் (தொழுகை நடத்துபவர்) பிரசங்கம் செய்வதற்காக கட்டப்பட்டிருக்கும். மிஹ்ராப் மிம்பருக்கு இடது பக்கத்தில் அமைந்திருக்கும்.

படங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஹ்ராப்&oldid=2681811" இருந்து மீள்விக்கப்பட்டது