ஒன்றுகளின் அணி
கணிதத்தில் ஒன்றுகளின் அணி (matrix of ones அல்லது all-ones matrix) என்பது மெய்யெண்களில் அமைந்த அணி; இவ்வணியின் ஒவ்வொரு உறுப்பும் 1 ஆக இருக்கும்.[1]
- எடுத்துக்காட்டுகள்:
சில மூலங்களில் ஒன்றுகளின் அணியானது ”அலகு அணி” என்றும் அழைக்கப்படுகிறது.[2] ஆனால் அலகு அணி என்பது ஒன்றுகளின் அணியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முற்றொருமை அணியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பண்புகள்
தொகுn×n வரிசை கொண்ட ஒன்றுகளின் அணி J பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும்:
- J இன் சிறப்பியல்புப் பல்லுறுப்புக்கோவை (characteristic polynomial):
- J இன் [[சுவடு (நேரியல் இயற்கணிதம்)|சுவடு n;[3] J இன் அணிக்கோவையின் மதிப்பானது n = 1 எனில் 1 ஆகவும், n இன் பிற மதிப்புகளுக்கு 0 ஆகவும் இருக்கும்.
- J இன் தரம் 1; ஐகென் மதிப்புகள் மடங்கெண் 1 உடன் n ஆகவும், மடங்கெண் n−1 உடன் ”0” ஆகவும் இருக்கும்.[4]
- முந்தைய பண்பின்படி, J ஒரு நேர்ம-வரைவு அணி#நேர்ம-அரைவரைவு அணியாக இருக்கும்.
- [5]
- இதன் கிளை முடிவாக, அணி தன்னடுக்கு அணியாக இருக்கும்.[5]
- J , அணிகளின் ஆடமார்டு பெருக்கத்தின் முற்றொருமை உறுப்பு ஆகும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Horn, Roger A.; Johnson, Charles R. (2012), "0.2.8 The all-ones matrix and vector", Matrix Analysis, Cambridge University Press, p. 8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521839402.
- ↑ Weisstein, Eric W., "Unit Matrix", MathWorld.
- ↑ Stanley, Richard P. (2013), Algebraic Combinatorics: Walks, Trees, Tableaux, and More, Springer, Lemma 1.4, p. 4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781461469988.
- ↑ (Stanley 2013); (Horn & Johnson 2012), p. 65.
- ↑ 5.0 5.1 Timm, NeilH. (2002), Applied Multivariate Analysis, Springer texts in statistics, Springer, p. 30, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387227719.
- ↑ Smith, Jonathan D. H. (2011), Introduction to Abstract Algebra, CRC Press, p. 77, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420063721.