ஒய்யான்குடி

ஒய்யான்குடி (Oyangudi) தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் நகரத்தின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். ஒய்யான்குடி, நாசரேத் நகரத்திற்கு 2.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

ஒய்யான்குடி
கிராமம்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு628616
தொலைபேசிக் குறி91-4639

இக்கிராமம் மூக்குப்பிறி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டது. இக்கிராமத்தின் நடுவே தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) தேவாலயம்- பரிசுத்த திரித்துவ ஆலயம் அமையப்பெற்ள்ளது.

இது 1840 காலகட்டத்தில் ஆறு பேர் கொண்ட சிறு ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பண்டிகை காலங்களில் சுமார் 1,500 பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது

*ஆலய சிறப்பு*

இந்த ஆலயம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் மற்ற ஆலயங்களில் இல்லாத சிறப்பு இந்த ஆலயத்திற்கு உண்டு

இந்த ஆலயம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் மற்ற ஆலயங்களில் ஆண்டுதோறும் ஆலயம் கட்டிய தினத்தில் கொண்டாடும் ஆலயப்பிரதிஸ்டை நேரத்தில், அசனம் என்ற பெயரில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கம்

ஆனால் ஒய்யான்குடி ஆலயத்தில் ஜனவரி முதல் நாள் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்படுகிறது

சுமார் பத்தாயிரம் பேருக்கு மேல் வந்து வாங்கிச்செல்வார்கள்

இக்கிராமத்தின் பிரதான வீதியின் மேற்கு பகுதியில் இந்திய ஏக சபை தேவாலயம் அமைந்துள்ளது. ஒய்யான்குடி கிராமத்தில் நான்கு பிரதான வீதிகள் உள்ளன. அவை கிழக்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி, மற்றும் தெற்கு வீதி. தபால் அலுவலகம் தெற்கு வீதியில் அமைந்துள்ளது. ஒரு உயர் நீர்த்தேக்கத் தொட்டி கிழக்கு வீதியில் அமைந்துள்ளது. நாசரேத்திலிருந்து திருச்செந்தூருக்கு செல்லும் நெடுஞ்சாலை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை பிரிப்பதாக அமைந்துள்ளது. இக்கிராமத்தின் தெற்குப் பகுதியில் அமையப் பெற்றுள்ள தொடர்வண்டி தண்டவாளம் கிழக்கிலிருந்து மேற்கு மார்க்கமாக திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலியை நோக்கிச் செல்கிறது.

புவியியல் தொகு

ஒய்யான்குடி, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தின் அருகில் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பகுதியில் கடம்பாகுளம் என்ற பெரிய குளத்தினால் சூழப்பெற்றுள்ளது. இதன் தெற்கு பகுதி தேரி (செம்மணல் பரப்பு) காட்டினால் சூழப்பெற்றுள்ளது. இதன் வடக்குப் பகுதியில் மூக்குப்பிறி கிராமமும், இதன் கிழக்குப் பகுதியில் பாட்டக்கரை கிராமமும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் அனைவரும் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இங்கு கிறிஸ்தவம் முதன்மை மதமாகப் பின்பற்றப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவர்களும் பிறர் இந்திய ஏக இரட்சகர் சபையைச் சார்ந்தவர்கள். இந்த கிராமத்து மக்கள் கி.பி 1840-ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

மக்கள் தொகை தொகு

ஒய்யான்குடி கிராமத்தின் அருகிலுள்ள நகரங்கள் திருநெல்வேலி (45 கிலோ மீட்டர்) தூத்துக்குடி (47 கிலோ மீட்டர்) அருகாமையில் உள்ள இரயில்வே நிலையம் நாசரேத் (2.5 கிலோ மீட்டர்) மற்றும் கச்சினாவிளை (3 கிலோ மீட்டர்) அருகாமையில் அமையப்பெற்றுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையம் தூத்துக்குடியில் (47 கிலோ மீட்டர்) உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் தொகு

  1. பரிசுத்த திரித்துவ ஆலயம் ஒய்யான்குடி (தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்)
  2. இ.ஆர்.எஸ் சபை (இந்திய ஏக இரட்சகர் சபை)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்யான்குடி&oldid=3819949" இலிருந்து மீள்விக்கப்பட்டது