ஒய்ஸ்டர் அட்டை
ஒய்ஸ்டர் அட்டை என்பது இலண்டனில் பேருந்து, பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு, தெருத்தண்டவாளத்தில் ஓடும் டிராம், டொக்லான்ட் இலகுத் தொடருந்து (டீ.எல்.ஆர்) மற்றும் லண்டன் தொடருந்து ஆகியவற்றில் பயணங்களை மேற்கொள்ளப் பயன்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டையை குறிக்கும்.
இவ் ஒய்ஸ்டர் அட்டை சூலை 2003 முதல் சில வரம்புகளுக்குட்பட்ட அம்சங்களுடன் பொதுமக்கள் பாவனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது (சூன் 2010 கணக்கெடுப்பின்படி), 34 மில்லியன்களுக்கும் மேற்பட்டவர்களிடம் பாவனையிலுள்ளது. இவ்வட்டையின் சிறப்பம்சம் என்னவெனில் பொதுவாக போக்குவரத்து சேவைகளுக்காக வசூலிக்கப்படும் கட்டனத்தில் 80 கட்டணத்தையே இதன் மூலம் வசூலிக்கப்படுகிறது.
ஒய்ஸ்டர் அட்டை மீளப்பயன்படுத்தப்படக் கூடியது. அதன் செயற்பாட்டை இணையத்தினூடாகச் செய்யலாம். மேலும் அதில் உங்கள் வரவில் உள்ள பருவகாலச் சீட்டையும் பயணம் செய்யப் பணம் செலுத்தும் வசதியையும் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.
ஒய்ஸ்டர் அட்டை பாவனை
தொகுபயணம் செய்யும்போது சரியான கட்டணத்தைச் செலுத்துவதை உறுதி செய்ய, நீங்கள் எப்போதும் பயணத் தொடக்கத்தில் மஞ்சள் வாசிப்புப் பொறியில் தொட்டு உள்நுழைந்து பயண முடிவில் தொட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் உங்களிடம் கூடியபட்ச காசுக்கட்டணம் அறவிடப்படும். பேருந்துகளைப் பொறுத்தவரை, ஏறும்போது தொடவேண்டும். டிராம்களில் ஏறுமுன் டிராம் தரிப்பு மேடையில் உள்ள மஞ்சள் வாசிப்புப் பொறியில் தொடவேண்டும். ஆனால் இரு விடயங்களிலும் பயண முடிவில் தொட்டு வெளியேறலாகாது.
உங்கள் ஒய்ஸ்டர் அட்டையை மஞ்சள் வாசிப்புப் பொறியில் வைத்துத் தொடும்போது ஒரு ‘பீப்’ ஒலியுடன் பச்சை வெளிச்சம் வந்தால் உங்கள் அட்டை பயணத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதென்று அர்த்தமாகும். இரண்டு ‘பீப்’ ஒலியுடன் சிவப்பு வெளிச்சம் வந்தால் உங்கள் ஒய்ஸ்டர் அட்டை நிராகரிக்கப்பட்டு விட்டதென்று அர்த்தமாகும். உங்கள் ஒய்ஸ்டர் அட்டை பயணத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் வரை அல்லது உங்கள் பயணத்துக்கு வேறாகக் கட்டணம் செலுத்தும் வரை நீங்கள் மேற்கொண்டு செல்லலாகாது.
இவ் அட்டையை இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பின் 11 சேவைகளான பார்க்கலூ சேவை, சென்றல் சேவை, சேர்கிள் சேவை, டிஸ்திரிக் சேவை ஹாமசிமித் அன்ட் சிட்டி சேவை, யுபிளி சேவை, மெற்றோபொலிட்டன் சேவை, நொதேர்ன் சேவை, பிக்காடிலி சேவை, விக்ரோரியா சேவை, வாட்டர்லூ அன்ட் சிட்டி சேவை என்பனவற்றிலும் தேசிய புகையிரத சேவை புகையிரதங்களிலும் டீ.எல்.ஆர் எனப்படும் இரயில் சேவையிலும் பேரூந்துகளிலும் டிராம் வண்டிகளிலும், இலண்டன் படகு சேவைகளிலும் பயன்படுத்தலாம்.
வெளியிணைப்புகள்
தொகுTransport for London பரணிடப்பட்டது 2013-04-27 at the வந்தவழி இயந்திரம் லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம்