ஒய். நாகப்பா
இந்திய அரசியல்வாதி
ஒய். நாகப்பா (Y. Nagappa) (1944/1945 - 27 அக்டோபர் 2020 ) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். நாகப்பா,[1] ஒரு மருத்துவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலில் சேருவதற்கு முன்பு ஆவேரி மாவட்டத்தின் ஹங்கல் வட்டத்தில் உள்ள அக்கியாலூரில் பயிற்சி பெற்றார். தீவிர அரசியலில் சேருவதற்கு முன்பு அரிஹர் அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக இருந்தார். இவர் ஹரிஹர் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டு காங்கிரசுக்கான உட்கட்சித் தேர்தலில் பிபி ஹரிஷால் தோற்கடிக்கப்பட்டார்.[2] இவர் 27 அக்டோபர் 2020 அன்று தனது 75 வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Y. Nagappa's son commits suicide Wednesday, Feb 22, 2006 at thehindu.com
- ↑ Profile of Dr. Y. Nagappa: Congress Candidate; Harihar, Davanagere district : Karnataka Assembly Elections 2008 பரணிடப்பட்டது மே 28, 2008 at the வந்தவழி இயந்திரம் Thursday, May. 29, 2008 (IST) at jeetegakaun.in