ஹங்கல் (Hangal) மேலும் ஹனகல், ஹனுங்கல், ஹன்கல் என்றெல்லாம் உச்சரிக்கப்படும் இது வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரமாகும். இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஆவேரி மாவட்டத்தில் உள்ளது.

ஹங்கல்
ஹனுகல்
நகரம்
ஹங்கல் தாரகேசுவரர் கோயில்
ஹங்கல் தாரகேசுவரர் கோயில்
அடைபெயர்(கள்): பனகல்
ஹங்கல் is located in கருநாடகம்
ஹங்கல்
ஹங்கல்
கர்நாடகாவில் ஹங்கலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°46′01″N 75°07′34″E / 14.767°N 75.126°E / 14.767; 75.126
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஆவேரி
மக்களவைத் தொகுதிஆவேரி
ஏற்றம்
555 m (1,821 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,159
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
581 104
தொலைபேசி குறியீட்டு எண்08379
ஐஎசுஓ 3166 குறியீடுஐஎன்-கேஏ
வாகனப் பதிவுகேஏ-27
இணையதளம்www.hanagaltown.gov.in

அமைவிடம்

தொகு

ஹங்கல், ஹூப்ளி-தார்வாடு நகருக்கு தெற்கே 75 கிலோமீட்டர் (47 மைல்) தொலைவிலும், துங்கபத்ரா ஆற்றின் மேற்கே 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவிலும், அரபிக் கடலின் கிழக்கிலும் உள்ளது. அனகேரே ஏரி இதன் அருகே அமைந்துள்ளது. இந்த நகரம் ஒரு விவசாய மாவட்டத்தின் நிலப்பரப்பில் உள்ளது. [1]

வரலாறு

தொகு

ஆரம்ப ஆவணங்களில் இந்த நகரம் பனகல் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் ஒரு பண்டைய வம்சமான கதம்பர்களின் நிலப்பிரபுத்துவத்தின் தலைநகராக இருந்தது. [2] [3] [4] [5] இவர்கள் இன்றைய கோவா மாநிலத்தின் பகுதியையும் அருகிலுள்ள கொங்கண் பகுதியையும் பொ.ச. 485 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். இவர்கள் சமண பாரம்பரியத்தில் இங்கு பல கோயில்களைக் கட்டினார்கள். [6] இடைக்கால கல்வெட்டுகளில், இது விராடக்கோட்டை என்றும் விராடநகரி என்று அழைக்கப்பட்டது. உள்ளூர் புனைவுகளின்படி பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் பதின்மூன்றாம் ஆண்டைக் கழித்த இடம் இது என்று நம்பப்படுகிறது.

சுமார் 1031இல், போசளர்கள் இந்தப்பகுதியை தங்கள் கைவசம் வைத்திருந்தனர். 1060இல், சிலஹாரா வம்சத்தைச் சேர்ந்த மல்லிகார்ச்சுனன் இதை முற்றுகையிட்டு கைப்பற்றினான். [7]

12 ஆம் நூற்றாண்டில், தக்காண ஆட்சியாளர்களான மேலைச் சாளுக்கியர்களால் ஆளப்பட்டது. [8] சாளுக்கியர்கள் சாம்பல்-பச்சை நிற கற்களைக் கொண்டு கதக் கட்டடக்கலை பாணியில் பல கோயில்களைக் கட்டினர். [9]

சூலை 14, 1800 அன்று, ஆங்கிலப் படைகள் மராட்டா கிளர்ச்சியாளரான தாண்டியா பந்த் கோக்லாவிடமிருந்து ஹங்கலை வலுக்கட்டாயமாக கைப்பற்றியது. [10]

புள்ளிவிவரங்கள்

தொகு

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[11] ஹங்கலின் மக்கள் தொகை 25,011 என்பதாக இருந்தது. இதில் ஆண்கள் 51% மக்கள்தொகையும் பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். ஹங்கலின் சராசரி கல்வியறிவு விகிதம் 64% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 67%, மற்றும் பெண் கல்வியறிவு 60%. மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டவர்கள்.

போக்குவரத்து

தொகு

ஹங்கல் மாநிலத் தலைநகர் பெங்களூரிலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் (230 மைல்) தொலைவிலும் ஆவேரியிலிருந்து 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவிலும் உள்ளது. பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா மற்றும் ஆவேரி வழியாகவும், தார்வாட்டிலிருந்து ஹூப்ளி மற்றும் சிகாவி வழியாகவும் இந்த நகரத்தை அடையலாம். அருகிலுள்ள இரயில் நிலையம் ஆவேரியில் உள்ளது

கோயில்கள்

தொகு

சாளுக்கியர்கள் மற்றும் போசளர்கள் தொடர்பான பல வரலாற்றுக் கோயில்கள் ஹங்கலில் உள்ளன .

தாரகேசுவரர் கோயில்

தொகு
 
ஹங்கல் தாரகேசுவரர் கோயில்

தாரகேசுவரர் கோயில் என்பது 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்த உருவங்கள் மற்றும் தூண்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய கோயிலாகும். இக்கோயில் இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [12] [13] [14] இங்குள்ள சிற்பங்களில் இராமாயணத்தின் காட்சிகளும் அடங்கும். [15]

கோட்டையில் சமண கோயில்

தொகு
 
தோட்டக்கலைத் துறை வளாகத்தில் அமைந்துள்ள கோயில்

ஹங்கல் கோட்டையில் உள்ள சமண கோயில் தோட்டக்கலைத் துறையின் வளாகத்தில் அமைந்துள்ளது. இது கி.பி 1150க்கு முந்தையது. [16] [17] போசளப் பாணியில் உள்ள கோயில் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. [18]

வீரபத்ரன் கோயில்

தொகு

வீரபத்ரன் கோயிலும் இங்குள்ள கோட்டையில் அமைந்துள்ளது. மிகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், அதை மீட்டெடுக்கும் பணி தேவைப்படுகிறது. [19]

பில்லேசுவரர் கோயில்

தொகு
 
பில்லேசுவரர் கோயில்

கோட்டையில் மேலும் பில்லேசுவரர் கோயில் ஒன்று போசளர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கருவறையின் வாசலிலுள்ள கதவுகளில் விரிவாக செதுக்கப்பட்ட வேலைப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் கீழும், ஐந்து செதுக்கப்பட்ட வடிவைமைப்புகள் உள்ளன. மன்மதன் சிலையும் இதன் பக்கத்தில் இரதி தேவி சிலையும் இருக்கிறது.

புகைப்பட தொகுப்பு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Hangal, Karnataka map." Google.com Accessed 9 November 2015.
  2. "Handbook of Karnataka." பரணிடப்பட்டது 7 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் Gazetteer Accessed 11 August 2008
  3. "The Kadambas of Hangal." Nupam.com Accessed 11 August 2008
  4. Moreas G. "The Kadamba Kula." at Google books.co Accessed 9 March 2009.
  5. "The Kadambas of Hangal." பரணிடப்பட்டது 2008-07-24 at the வந்தவழி இயந்திரம் Prabhu.50g.com Accessed 11 August 2008.
  6. "General view of a small ruined Jain temple in the Fort, Hangal." At Google Books.co Accessed 17 October 2008.
  7. Moraes G. "The Kadamba Kula: A History of Ancient and Mediaeval Karnataka." Asian Educational Services, 1995 p129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120605950, 9788120605954.
  8. Pigou W. "Hungul, a temple." 1857. At Bl.uk online gallery. Accessed 13 March 2009.
  9. "The Kadambas of Hangal." பரணிடப்பட்டது 2008-07-24 at the வந்தவழி இயந்திரம் Prabhu.50g.com Accessed 13 March 2009.
  10. Wellesley A. "The Dispatches of Field Marshal the Duke of Wellington, K. G. During His Various Campaigns in India, Denmark, Portugal, Spain, the Low Countries, and France: India, 1794-1805." J. Murray, 1834 p69 at Google Books accessed 8 November 2015.
  11. "Census of India 2001."[தொடர்பிழந்த இணைப்பு] Census commission of India. Accessed 1 November 2008.
  12. "Tarakeshwara temple." Bl.uk online gallery. Accessed 17 October 2008.
  13. "Alphabetical list of monuments - Karnataka - Dharwad." Asi.nic.India accessed 13 March 2009.
  14. "The Architectural Antiquities of western India." Archive.org Accessed 17 October 2008.
  15. "General view from the south-west of the Tarakeshvara Temple, Hangal." Bl.uk online gallery. Accessed 13 March 2009.
  16. "List of Monuments" பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் India studies.org Accessed 30 March 2009. Archive.org Accessed 1 December 2008.
  17. "View from the north Jain temple." Bl.uk Online gallery. Accessed 30 March 2009.
  18. Hardy A. "Indian Temple Architecture." At Google Books. Accessed 30 March 2009.
  19. "Karnataka Temples." Shaivam.org Accessed 12 January 2009.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹங்கல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹங்கல்&oldid=3229836" இலிருந்து மீள்விக்கப்பட்டது