மல்லிகார்ச்சுனன் (சிலஹாரா வம்சம்)
மல்லிகார்ச்சுனன் (Mallikarjuna ) என்பவன் சிலஹாரா வம்சத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சியாளராவான். இவன் வடக்கு கொங்கண் பகுதியை கிபி 1155-1170 வரை ஆட்சி செய்து வந்தான்.
ஆட்சி
தொகுமுதலாம் அபராதித்தனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரிபாலதேவனுக்குப் பின் மல்லிகார்ச்சுனன் ஆட்சிக்கு வந்தான். ஆனால் இவனது முன்னோடிக்கும் இவனுக்குமான உறவு பற்றி தெரியவில்லை. சக ஆண்டு 1106, 1107, மற்றும் 1108 ஆகிய தேதிகளில் இவனது ஆட்சியின் மூன்று கல்வெட்டுகள் முறையே லோனாத், தானே மற்றும் பரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில் அபராதித்ய மகாராஜாதிராஜா என்றும் கொங்ண்-சக்ரவர்த்தி என்ற ஏகாதிபத்திய பட்டங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவன் சோலாங்கியர்களின் குசராத்தை கைப்பற்றியதைக் காட்டுகிறது. இவனை பொ.ச. 1170–1195 காலத்திற்கு குறிப்பிடப்படலாம். [1]
இறப்பு
தொகுபிருத்விராஜ விஜயம் என்ற நூலில், சாமன மன்னன் சோமேசுவரர் தனது தாய்வழி உறவினரான சோலங்கி மன்னன் குமாரபாலனின் மீதான போரின்போது குங்குனா (கொங்கண்) மன்னனின் தலையைத் துண்டித்ததாகத் தெரிவிக்கிறது. [2] இவன் மல்லிகார்ச்சுனனுடன் அடையாளம் காணப்படுகிறான். மேலும் இவனது மரணம் 1160 மற்றும் 1162 க்கு இடையில் இருக்கலாம். சோலங்கியின் பிரதம அமைச்சர் உதயனனின் மகனான அமிரபட்டன் (அல்லது அம்படன்) என்பவனுக்கு கொங்கண் ஆட்சியாளரைக் கொன்ற பெருமையை குமாரபாலா-சரிதம் என்ற நூல் அளிக்கிறது. வரலாற்றாசிரியர்களான தசரத சர்மா மற்றும் ஆர்.பி. சிங் ஆகியோர், முற்றுகையின்போது தலைமைத் தளபதியாக அமிரபட்டன் இருந்தான் எனத் தெரிவிக்கின்றனர். அதே சமயம் அவனது துணைத் தளபதியான சோமேசுவரன் என்பவன் மல்லிகார்ச்சுனனைக் கொன்றதாகத் தெரிவிக்கின்றனர். [3] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ (Dept. Gazetteer: 2002)
- ↑ 2.0 2.1 Dasharatha Sharma 1959.
- ↑ R. B. Singh 1964.
நூலியல்
தொகு- Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
- Bhandarkar R. G. (1957): Early History of Deccan, Sushil Gupta (I) Pvt Ltd, Calcutta.
- Fleet J. F. (1896): The Dynasties of the Kanarese District of The Bombay Presidency, Written for the Bombay Gazetteer .
- Department of Gazetteer, Govt of Maharashtra (2002) : Itihaas : Prachin Kal, Khand -1 (Marathi)
- Department of Gazetteer, Govt of Maharashtra (1960) : Kolhapur District Gazetteer
- Department of Gazetteer, Govt of Maharashtra (1964) : Kolaba District Gazetteer
- Department of Gazetteer, Govt of Maharashtra (1982) : Thane District Gazetteer
- A. S. Altekar (1936): The Silaharas of Western India