ஒரு நாள் ஒரு கனவு

ஃபாசில் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரு நாள் ஒரு கனவு என்பது 2005ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படம். இப்படத்தை பசில் இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆனந்தகுட்டன் செய்தார்.[1] இப்படம் 2005 ஆகஸ்ட் 26 அன்று வெளியாகி சராசரி விமர்சனங்களைப் பெற்றது.[2]

ஒரு நாள் ஒரு கனவு
இயக்கம்பாசில்
நடிப்புஸ்ரீகாந்த்
சோனியா அகர்வால்
நிழல்கள் ரவி
வெளியீடு2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாநாயகி சோனியா அகர்வால் பணத்தையே பெரிதாக எண்ணும் சகோதர்களுடன் பிறந்தவர். கதாநாயகன் ஸ்ரீகாந்த் பாசமே பெரிது என்று பாசமழை பொழியும் சகோதரிகளுடன் பிறந்தவர். இருவருக்கும் இடையியே தோன்றும் மோதல், சவால் மற்றும் காதல்தான் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் கதை.

திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் இளையராஜா இசையமைத்தார்.[3] "காற்றில் வரும் கீதமே" பாடல் மேசகல்யாணி இராகத்தில் அமைந்திருந்தது.[4] இப்பாடலுக்கு மெட்டமைத்து இளையராஜா வாலி அவர்களுக்கு வாசித்து காட்டிய பொழுது, வாலி அவர்கள் "ஸ்ரீ முகுந்தா கோசவா நான் உன் புகழ் பேசவா" என்றார். இளையராஜா அதற்கு பாட்டில் 'பேசவா' என்றயிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதனால் வாலி தற்பொழுது உள்ள வரிகளுக்குப் பாட்டின் வரிகளை மாற்றினார்.[5] "கசிராகோ" பாடல் கீரவாணி இராகத்தில் அமைந்திருந்தது.[6]

Song Singers Lyrics
"என்ன பாட்டு வேணும்" சோனு நிகம் பழநிபாரதி
"இளமைக்கோர் வேகம்" வாலி
"காற்றில் வரும் கீதமே 1" பவதாரிணி, சிரேயா கோசல், சாதனா சர்கம், ஹரிஹரன்
"காற்றில் வரும் கீதமே 2" சிரேயா கோசல், பவதாரிணி
"காற்றில் வரும் கீதமே 3" இளையராஜா
"கசிராகோ கனவில்" ஹரிஹரன், பவதாரிணி பழநிபாரதி
"கொஞ்சும் திற" பவதாரிணி, சோனு நிகம் Vaali
"பொன்னுக்கிட்ட மாப்பிள்ளை" மஞ்சரி, திப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "Fazil's unusual love story". சிஃபி. Archived from the original on 10 August 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2013.
  2. "Crazy little thing called love". தி இந்து. 26 August 2005. Archived from the original on 13 February 2006. பார்க்கப்பட்ட நாள் 25 March 2013.
  3. "ORU NAAL ORU KANAVU / A,B,C,D". AVDigital. Archived from the original on 26 September 2023. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  4. Ashok Kumar, S.R. (6 March 2008). "Ragam-based film song show". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210606091335/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Ragam-based-film-song-show/article15178914.ece. 
  5. vjseelan (2009-07-25). "How a composition / song takes shape. Ilayaraja & Valli: "Kaatril varum geethame"". பார்க்கப்பட்ட நாள் 2024-11-10.
  6. Charulatha Mani (26 April 2013). "Harmonious symmetry". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141219171338/http://www.thehindu.com/features/friday-review/music/harmonious-symmetry/article4657111.ece. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_நாள்_ஒரு_கனவு&oldid=4139608" இலிருந்து மீள்விக்கப்பட்டது