ஒலிம்பிக் வாழ்த்துப்பாடல்
ஒலிம்பிக் வாழ்த்துப்பாடல் (கிரேக்க மொழி: Ολυμπιακός Ύμνος, Olympiakós Ýmnos, Olympic Anthem), அல்லது ஒலிம்பிக் பண் ஆப்பெரா இசையமைப்பாளர் இசுபைரிடோன் சமராசால் கிரேக்க கவிஞர் கோசுட்டீசு பலாமாசு எழுதிய பாடல்வரிகளுக்கு அமைக்கபட்ட சேர்ந்திசை வாயசைப்பு பாடலாகும். இந்த இருவரையும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் முதல் தலைவராக இருந்த கிரேக்க டெமெட்ரியசு விகெலாசு இப்பணிக்கு அமர்த்தினார்.
ஆங்கிலம்: Olympic Anthem | |
---|---|
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு அலுவல்முறை/ஒலிம்பிக் கீதம் | |
எனவும் அறியப்படுகிறது | கிரேக்க மொழி: Ολυμπιακός Ύμνος பிரெஞ்சு மொழி: Hymne Olympique |
இயற்றியவர் | கோசுட்டீசு பலாமாசு |
இசை | இசுபைரிடோன் சமராசு, 1896 |
சேர்க்கப்பட்டது | 1958 |
இசை மாதிரி | |
ஒலிம்பிக் பண் |
வரலாறு
தொகுஇந்த வாழ்த்துப்பாடல் முதல்முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் விளையாடப்பட்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழாவில் பாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் ஏற்றுக்கொண்ட போட்டிகளில் நடத்தும் நாடுகள் பல்வேறு இசையமைப்பாளர்களைக் கொண்டு குறிப்பிட்ட ஒலிம்பிக் வாழ்த்துப்பாடலை இசையமைத்துப் பாடி வந்தனர்.
1958ஆம் ஆண்டில் சப்பானின் தோக்கியோவில் கூடிய பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 54வது அமர்வில் சமராசு இசையமைத்து பலாமாசு இயற்றிய பாடலை அலுவல்முறை ஒலிம்பிக் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொண்டது. எனவே 1960 முதல் ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் துவக்க விழாக்களிலும் நிறைவு விழாக்களிலும் பாடப்பட்டு வருகிறது.[1]