ஒலிவர் தட்டச்சுபொறி நிறுவனம்
ஒலிவர் தட்டச்சுபொறி நிறுவனம், ஜக்கிய அமெரிக்காவின் இல்லினாய்ஸ் இல் சிக்காகோ நகரை தலைமையகமாக கொண்ட ஒரு தட்டச்சுபொறி உற்பத்தி நிறுவனமாகும். இத்தட்டச்சு பொறியானது முதன் முதலில் உருவாக்கப்பட்ட தெரியும் அச்சுக்களை கொண்ட பயனுள்ள சாதனமாகும் அதாவது தட்டச்சு செய்யப்படும் எழுத்துக்கள் தட்டெழுத்தாளரால் உடனடியாக காண இயலும் [2]. ஒலிவர் தட்டச்சு பொறிகள் மிக அதிகமாக உள்ளநாட்டு விநியோகஸ்தர்கள் மற்றும் கடன் விற்பனையை பயன்படுத்தி வீட்டு பாவனைக்காக விற்கப்படுகின்றது. ஒலிவர் நிறுவனம் 1895 ஆம் ஆண்டிலிருந்து 1928 ஆம் ஆண்டு வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொறிகளை உற்பத்தி செய்துள்ளதுடன் தன் வடிவமைப்பு உரிமத்தை பல சர்வதேச நிறுவனங்களில் நிலை நாட்டியுள்ளது.
முன்னைய வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1895 |
நிறுவனர்(கள்) | தாமஸ் ஒலிவர் |
செயலற்றது | 1926 |
தலைமையகம் | சிகாகோ, இலியானிஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
சேவை வழங்கும் பகுதி | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
முதன்மை நபர்கள் | தாமஸ் ஒலிவர் |
தொழில்துறை | தட்டச்சுபொறி நிறுவனம் |
பணியாளர் | 875 |
[1] |
1928 இல் சந்தை போட்டி அழுத்தம், நிதி பிரச்சனைகள் காரணமாக பணப்புழக்கத்தை எதிர்நோக்கியது. இந்நிறுவனத்தின் சொத்துக்கள் பிரித்தானிய நிறுவனத்தை உருவாக்கிய முதலீட்டாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டது. பிரித்தானிய ஒலிவர் நிறுவனமானது 1950 களின் பிற்பகுதியில் சொந்தமாக மூடப்படும் வரை தட்டச்சு பொறிகளை உற்பத்தி செய்து உரிமத்துடன் வெளியிட்டது. இறுதி ஒலிவர் தட்டச்சுபொறி 1959 ல் தயாரிக்கப்பட்டது.
வரலாறு
தொகுதாமஸ் ஒலிவர்
தொகுதாமஸ் ஒலிவர் 1852 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1 ஆம் திகதி அன்று கனடா வூட்ஸ்டோக், ஒண்டோரியோ நகரில் பிறந்தார். ஒலிவர் அவரின் தாயாரின் மறைவின் பின் மிகுந்த மதப்பற்று கொண்டமையினால் மோடிசெல்லோ நகரிற்கு மேதொடிஸ்ட் அமைச்சராக பணியாற்ற சென்றார். 1888 ஆம் ஆண்டில் தெளிவான செய்திகளை வழங்குவதற்காக[3] தகர பேணி பட்டைகளை பயன்படுத்தி தனது முதலாவது தட்டச்சு பொறியை உருவாக்கினார்[4]. 1891 ஆம் ஆண்டு[5] சித்திரை மாதம் 7 ஆம் திகதி அன்று தனது முதலாவது தட்டச்சு பொறிக்கான காப்புரிமையை அமெரிக்க காப்புரிமை எண் 450107 இன் கீழ் பெற்றுக்கொண்டார். நான்கு வருட வளர்ச்சிக்கு பின் 500 பக்கங்களை கொண்ட திடமான வேலை மாதிரி தயாரிக்கப்பட்டது. பின்னர் ஒலிவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகி அயொவாவில் உள்ள எப்வோர்த் நகருக்கு சென்றார். அங்கு தனது இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து, $15000 ($425000, 2014) மூலதனமாக வழங்க தயாராக இருந்த அயொவா முதலீடாளர்களையும் கண்டுபிடித்தார்.
ஒலிவர் தனது தட்டச்சு பொறியை சந்தைபடுத்த சிக்காகோ சென்றிருந்த போது, அங்கு தொழிலதிபர் டெலவன் ஸ்மித் தட்டச்சு பொறி மீது ஆர்வம் கொண்டு, அயொவா முதலீட்டாளர்களிடம் இருப்பிலிருந்த தட்டச்சு பொறியை கொள்வனவு செய்தார். ஒலிவர், நிறுவனத்திலிருந்து 65% வட்டி மற்றும் $3000[6](2014, ஆண்டுக்கு $85000) சம்பளத்தை பெற்றுக்கொண்டதுடன் தனது தட்டச்சு பொறி வளர்ச்சியை தக்க வைத்துக்கொண்டார். ஒலிவர் தனது 56 ஆவது வயதில் 1909 ஆம் ஆண்டு மாசி 9 ஆம் திகதி அன்று திடீர் இதய நோய் காரணமாக இறந்தார்..[7]
இல்லினாய்ஸ் ஆண்டுகள்
தொகுஒலிவர் தட்டச்சுபொறி நிறுவனம் 1895 ஆம் ஆண்டு தலைமையகமாக சிகாகோவில் அமைந்துள்ள கிளார்க் மற்றும் ரண்டோல்ப் வீதியின் மூலையில் உள்ள கட்டிடத்தில் ஒன்பதாவது மாடியில் செயல்பட தொடங்கியது . 1986 ஆம் ஆண்டு உற்பத்தி பிரிவானது அயோவாவில் இருந்து வூட்ஸ்டோக்கில் அமைந்துள்ள வீலெர் & தப்பன் நிறுவனத்தால் உபயோகிக்கப்பட்ட ஒரு காலியான தொழிற்சாலைக்கு இடம்மாற்றப்பட்டது, இது ஒலிவருக்கு வூட்ஸ்டோக்கால், நிறுவனம் குறைந்தளவு 5 ஆண்டுகள்[8] செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையில் நன்கொடையாக வழங்கப்பட்டது. உற்பத்தியானது ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது அவையாவன: வகைபட்டியல், இடம்மாற்றல், ஒன்றிணைத்தல், ஒழுங்கமைத்தல், சீரமைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் ஒரு ஒழுங்கமைத்தல் அறையும் காணப்பட்டது[9]. நிறுவனத்தின் தலைமையகம் 1907 ஆம் ஆண்டு செயற்பாடுகள் நிறைவடைந்த நிலையில் சிக்கோவில் உள்ள ஒலிவர் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது, இதுவே தற்பொழுது வரலாற்று இடங்கள் பற்றிய தேசிய பதிவேட்டில் மைல்கல்லாக இருக்கின்றது.[10]
1899 ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிறுவனமானது உள்ளநாட்டு விநியோகங்களை மேற்கொள்ளவதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் விற்பனை வலையமைப்பை நிறுவியது. இவ்வகையான சந்தைப்படுத்தல் முறை நம்பகத்தன்மையை அடிப்படையாக கொண்டு நேரடி விற்பனையை ஊக்குவித்ததுஇ 1905 ஆம் ஆண்டின் பின் கடன் விற்பனைகளையும் ஊக்குவித்தது. 1910 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதிகரித்த சந்தைபோட்டியின் விளைவாக நிறுவனத்தின் உள்ளநாட்டு விற்பனையாளர்களை நீக்கி அவர்களின் தரகுகளால் பெறப்பட்ட சேமிப்பை பயன்படுத்தி, தட்டச்சுபொறிகளின் விலையை அரைவாசியாக $100 (2014 ஆம் ஆண்டில் $1400) க்கு குறைத்தது[11]. இதன் விளைவாக விற்பனை அதிகரித்ததுடன் நிறுவனத்தின் 875 தொழிலாளர்களால் அதன் உச்சகட்டத்தில் தினமும் 375 இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.[11]
இல்லினாய்ஸில் அமைந்துள்ள அலுவலகத்துடன், ஒலிவர் நிறுவனமானது பல்டிமோர், பப்பலோ, கலேவேலாந்து, கனாஸ் நகரம், மின்னேபொலிஸ், நியூயார்க் நகரம், ஒமஹா, புனித.லூயிஸ், சண் பிரான்சிஸ்கோ மற்றும் சியாடல் போன்ற நகரங்களில் கிளை அலுவங்கங்களையும் கொண்டிருந்தது. இவை அனைத்தும் விற்பனை விநியோகங்களை அஞ்சல் உத்தரவு விற்பனையாக மாற்றம் செய்த பொழுது மூடப்பட்டது. 1921 - 22 ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்ட சிறிய பொருளாதார பின்னடைவு காரணமாக, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது தட்டச்சுபொறிகளை மீட்பதற்காக அவர்களுக்கு பணம் செலுத்தவேண்டி ஏற்பட்டது. நிறுவனமானது கடன் எடுப்பதில்லை என முடிவெடுத்து 1926 ஆம் ஆண்டு அதன் நிருவகக்குழு நிறுவன முறிவுக்கு வாக்களித்தது. செஸ்டர் நெல்சன் என்ற ஒரு ஊழியர் மட்டும் முறிவை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டார்.[11]
பிரித்தானிய ஒலிவர் தட்டச்சுபொறி நிறுவனம்
தொகு1928 ஆம் ஆண்டு ஒலிவர் தட்டச்சுபொறி நிறுவனமானது இங்கிலாந்தில் அமைந்துள்ள குரோய்டன் நகரில் பிரித்தானிய ஒலிவர் தட்டச்சுபொறி நிறுவனத்தை உருவாக்கிய முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டது. நிறுவனம், நான்கு நிரல்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜேர்மன் மாதிரி "Fortuna" தட்டச்சுபொறியை 1931 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்ய தொடங்கியமையால் ஒலிவரின் அசல் மூன்று நிரல் விசைப்பலகை மாதிரியின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 1935 ஆம் ஆண்டு நிறுவனம் மற்றொரு உரிமம் பெற்ற வடிவமைப்பை, மாதிரி எண் 20 ஆக Halda-Norden எனப்படும் நிலையான தட்டச்சுபொறியை உற்பத்தி செய்ய தொடங்கியது. எனினும் இரண்டாம் உலகப்போரின் பொது பிரித்தானிய அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட, மூன்று நிரல் கொண்ட எண்.15 பொறிக்கான உத்தரவிற்காக நிறுவனம் அசல் ஒலிவர் வடிவமைப்பை உற்பத்தி செய்ய ஏற்பட்டதுடன் இயந்திரங்களை பழைய நிலைமைக்கு மாற்ற வேண்டி்யும் ஏற்பட்டது[12].
1947 ஆம் ஆண்டில் நிறுவனம், ஒலிவர் என்னும் பெயரை பல ஐரோப்பிய உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்க தொடங்கிய போது எண்.20 வடிவமைப்புக்கான உற்பத்தி மீண்டும் தொடங்கியது. நிலையான டெஸ்க்டாப் கணணி உற்பத்தி, எளிதில் தூக்கிச்செல்லக்கூடிய சிறிய மாதிரியின் உருவாக்கத்தின் பின் கைவிடப்பட்டது; நிறுவனம் சிமாக் நியமத்தை கொண்ட ஜேர்மன் வடிவமைப்பை ஒலிவர் நியமமாக விற்பனை செய்ய தொடங்கியது. 1958 ஆம் ஆண்டில் ஒலிவர் நோர்ட்டின்கம் இல் முன்பு பார்லொக் தட்டச்சுபொறி நிறுவனமாக இருந்த பய்ரோன் தடச்சுபொறி நிறுவனத்தை கொள்வனவு செய்தார். உரிமப்படுத்தும் முயற்சிகள் யாவும் தோல்வியை தழுவியது, மற்றும் நிறுவனத்தின் இயந்திர கருவிகள் ஜெர்மனில் உள்ள தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டது.[13]
தட்டச்சுப்பொறிகள்
தொகுவடிவமைப்பு
தொகுஒலிவர் தட்டச்சுபொறிகளின் பொது வடிவமைப்பு நிறுவனத்தின் வரலாறு முழுவதும் மாறாமல் காணப்பட்டது[11]. இவை "down Strike" தட்டச்சுபொறிகள் ஆகும், அதாவது தட்டேழுத்தானி உருளையில் கீழ்புறமாகவோ (up strike) அல்லது முற்புறமாகவோ (front strike) அல்லாது மேற்புறமாக அடிக்கப்படும். "up strike" அதாவது தட்டேழுத்துக்கள் கீழ்பக்கமாக பார்வைக்கு அப்பால் அடிக்கப்டுவது போல் அல்லாது "down strike" இல் தெரியும் அச்சுக்களை கொண்ட வடிவமைப்பு காணப்படுகின்றது, அதாவது தட்டேழுத்தாளரால் முழுபக்கத்தையும் பார்க்க இயலும். இது (down strike) அதிக தட்டெழுத்து ஆற்றலை கொண்டிருந்தமையால், இவை சிறப்பாக ஸ்டென்சில் கட்டிங் அல்லது "manifolding" போன்ற பாவனைக்காக பயன்படுத்தப்பட்டது[14]. "front strike" போன்ற உறுதியான வடிவமைப்பானது 1889-91 காலகட்டத்தில் காப்புரிமையை பெற்றது, ஆனால் ஒரு பயனுள்ள தெரியும் அச்சுகளை காட்டும் வேறு இயந்திரங்கள் 1987 ஆம் அண்டு வரை உற்பத்தி செய்யப்படவில்லை, ஒலிவர் பொறி அறிமுகபடுத்தி மூன்று ஆண்டுகளின் பின் அண்டர்வூட் இயந்திரம் சந்தைக்கு அறிமுகபடுத்தப்பட்டது.[15]
ஒலிவர் விசைப்பலகையானது வில் வடிவில் வளைந்திருப்பதோடு (அதாவது தலைகீழ் U வடிவம்) தட்டச்சின் இரு புறங்களும் கோபுரம் போல் உயர்ந்திருக்கும். விசைபலகையானது படிப்படியாக பெரிதாக்கும் நோக்கில் மூன்று நிரல்களை கொண்டு QWERTY வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலான பொத்தான்கள், அதன் அளவு மற்றும் பயன்பாட்டை கருத்தில் கொண்டு இலக்கங்களை குறிக்கும் நான்காவது நிரலில் உள்ளடக்கப்பட்டது[15]. நான்கு நிரல் முன்மாதிரி 1922 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட போதிலும் அந்நேரத்தில் நிலவிய நிறுவனத்தின் நிதி பிரச்சனைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது[16] பிரித்தானிய ஒலிவர் தட்டச்சுபொறி நிறுவனம் உருவாக்கிய இல.20, இல.21 மற்றும் சிறிய மாதிரிகள் நான்கு நிரல் கொண்ட விசைப்பலகைகளையே கொண்டிருந்தன.
நிறம்
தொகுஒலிவர் தட்டச்சுபொறிகள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இணங்க ஒலிவ் பச்சை அல்லது நிக்கல் முலாம் நிறத்தில் தயாரிக்கப்படுவதுடன் விசைப்பலகை வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் உற்பத்தி செய்யபடுகின்றன. மாதிரி இல. 3 இயந்திரங்கள் சில பகுதிகளில் மட்டும், சூடான அல்லது ஈரப்பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்வதன் பொருட்டு குரோம் முலாம் பூசப்பட்டது[17] , அதனை விடுத்து ஏனைய பகுதிகளுக்கு பச்சை நிறம் பூசப்பட்டது. இந்நிறமானது மாதிரி இல. 11 ஐ[11] Oliver typewriters made for the British war effort were supplied with a "war finish".[12]
மாதிரிகள்
தொகுஐக்கி்ய அமெரிக்க நாடுகள்
தொகுபின்வரும் மாதிரிகள் 1894 மற்றும் 1928 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது:[11]
மாதிரி | தயாரித்த ஆண்டுகள் | உற்பத்தி செய்யப்பட்ட எண்ணிக்கை | குறிப்புகள் |
---|---|---|---|
இல. 1 | 1894-1896 | 5,000 | முதல் மாதிரி; முற்றிலும் நிக்கல் பூசப்பட்டது; பெயர் பலகைகள் மீது உள்ள "Oliver" இல் "O" மூடப்பட்டது |
இல. 1½ | 1896 | அறியப்படவில்லை | அதிகாரபூர்வமற்ற பட்டம்; இல. 2 நிக்கல் முலாம் பூசப்பட்டது, "O" மூடப்பட்டது |
இல. 2 | 1896-1901 | 30,000 | மேம்படுத்தப்பட்ட காகிதம்; கைப்பிடிகள் சேர்ந்தது; திறந்த "O" (லோகோவை பார்க்க) |
இல. 3/4 | 1902-1907 | 148,000 | அளவு பெரிது; வண்ண நாடா |
இல. 5/6 | 1907-1914 | 311,000 | அளிப்பான் சேர்ந்தது (Backspacer) |
இல. 7/8 | 1914-1915 | 57,000 | இடது எல்லைகோடு விசைப்பலகையின் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது |
இல. 9/10 | 1912-1922 | 449,000 | வலது மற்றும் இடது நகர் பொத்தான்கள்; இரு வண்ண நாடா |
இல. 11/12 | 1922-1928 | 35,000 | அமெரிக்காவின் இறுதி உற்பத்தி; கைப்பிடிகள் அகற்றப்பட்டது; கறுப்பு நிறம் |
மாதிரி இல. 2 ஐ தவிர, இரட்டை இலக்கங்களை கொண்ட மாதிரிகள் மிச்சமான பொத்தான்களுடன் (32 ற்கு 28) பண்டைய மொழியமைப்பு கொண்ட நாடுகளுக்கு விற்பதற்காக உருவாக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியம்
தொகுபின்வரும் மாதிரிகள் 1930 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளுக்கு இடையே பிரித்தானிய ஒலிவர் தட்டச்சுப்பொறி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது:[11][12]
மாதிரி | தயாரித்த ஆண்டுகள் | உற்பத்தி செய்யப்பட்ட எண்ணிக்கை | குறிப்புகள் |
---|---|---|---|
இல. 11 | 1928–1931 | அறியப்படவில்லை | அமெரிக்க நிறுவனம் மற்றும் பிரித்தானிய ஒலிவ் நிறுவனம் தயாரித்த இருப்புக்கள் பெறப்பட்டன |
இல. 15/16 | 1928–1947 | > 34,346 | |
இல. 20 | 1935–1950 | > 88,600 | Halda-Norden நிலையான தட்டச்சு இயந்திரமாக வியாபார குறியிடப்பட்டது |
இல. 21 | 1949–1959 | 33,129 | "well" typebar மூடப்பட்டது |
எடுத்துச்செல்லத்தக்க பொறி | 1930–1959 | > 83,500 | 1-5 வரை பல்வேறு சிறிய மாதிரிகள் உற்பத்தி செய்யப்பட்டன |
பிற நாடுகளில்
தொகுஒலிவர் தட்டச்சு வடிவமைப்புக்கள் பல்வேறு நாடுகளில் உற்பத்தி உரிமம் பெற்றது. மாதிரி இல. 3 வகைகள் Vienna வின் Montreal and A. Greger & Co. இன் லினோடைப் நிறுவனத்தால் உற்பத்திசெய்யப்பட்டது[18][19] . உரிமங்களின் உற்பத்தி மாதிரிகள் பல்வேறு பெயர்களின் கீழ் சந்தைப்படுத்தப்பட்டது, உதாரணமாக "Courier" (ஆசுதிரியா), "Fiver" (செருமனி),[20], "Stolzenberg" (ஐரோப்பிய கண்டம்) and "Revilo" (அர்கெந்தீனா).[14]. ஏற்கனவே அர்கெந்தீனாவில் பதியப்பட்ட ஒலிவர் பெயரானது தரவு பண செலுத்துகைகளை தவிர்பதற்காக Revilo உரிமத்தை தவிர்த்து[21]
குறிப்புகள்
தொகு- ↑ Brockman, Paul (April 9, 1999). "Delavan ஸ்மித் கட்டுரைகள் 1868-1921". இந்தியானா வரலாற்று சங்கம். பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
- ↑ Taylor, Carol (November 1999). "Looking into our Past". Daily Camera Librarian. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
- ↑ Rehr, டாரில் (1989 மே). "வணக்கத்துக்குரிய ஆலிவர் மேலும் ..." ( PDF ). முதலியவை - ஆரம்ப தட்டச்சுப்பொறி சேகரிப்பவர்களால் சங்கத்தின் இதழ். 8-9. பார்த்த நாள் 2007-11-11.
- ↑ ஒரு ப பிட்மேன், ஐசக் (1899). வர்த்தகம் கல்வி பிட்மேன் இதழ். சர் ஐசக் பிட்மான் & சன்ஸ், Ltd, ப. 707
- ↑ "அமெரிக்காவில் காப்புரிமை: 0450107" . அமெரிக்காவில் காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம். பார்த்த நாள் 2007-12-28.
- ↑ Rehr, Darryl (May 1989). "More on Reverend Oliver ..." (பி.டி.எவ்). ETCetera – Magazine of the Early Typewriter Collectors Association. pp. 8–9. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
- ↑ "Thomas Oliver" (பி.டி.எவ்). The New York Times. 1909-02-10. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
- ↑ Baker, Nancy L. (2006). Woodstock. Arcadia Publishing. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7385-4080-3.
- ↑ Hoke, Donald. "Product Design and Cost Considerations: Clock, Watch, and Typewriter Manufacturing in the 19th century" (பி.டி.எவ்). Outagamie Museum. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
- ↑ "Chicago Landmarks". City of Chicago Department of Planning and Development, Landmarks Division. Archived from the original on 2009-06-30. பார்க்கப்பட்ட நாள் 2007-12-20.
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 11.6 Rehr, Darryl (December 1992). "The Beginner's Oliver" (பி.டி.எவ்). ETCetera – Magazine of the Early Typewriter Collectors Association. pp. 10–11. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
- ↑ 12.0 12.1 12.2 Beeching, Wilfred A. (1974). Century of the Typewriter. St. Martin's Press. pp. 206–208.
- ↑ Davis, Will. "Oliver portables and relatives". oocities.com/wbd641. Archived from the original on 2009-10-22. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
- ↑ 14.0 14.1 Mares, George Carl (1985). The History of the Typewriter: Successor to the Pen. Post-Era Books. pp. 114, 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-911160-87-6.
- ↑ 15.0 15.1 Campbell-Kelly, Martin (December 2005). "The User-friendly Typewriter". The Rutherford Journal. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
- ↑ Rehr, Darryl (February 1989). "The Unknown Oliver" (PDF). ETCetera – Magazine of the Early Typewriter Collectors Association. pp. 1, 4–5. Retrieved 2007-11-11.
- ↑ Lewis, John (December 1995). "Not Your Ordinary Oliver" (பி.டி.எவ்). ETCetera – Magazine of the Early Typewriter Collectors Association. p. 3. பார்க்கப்பட்ட நாள் 2008-02-12.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ Decker, Don (July 1988). "Oddest of Olivers?" (பி.டி.எவ்). ETCetera – Magazine of the Early Typewriter Collectors Association. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2008-02-12.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ Frey, E. (1926). Luegers Lexikon der gesamten Technik und ihrer Hilfswissenschaften (in German). Deutsche Verlags-Anstalt. p. 117.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Adler, Michael H. (1973). The Writing Machine. George Allen & Unwin Ltd. p. 322. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-04-652004-X.
- ↑ Hammerton, John Alexander (1915). The Real Argentine: Notes and Impressions of a Year in the Argentine and Uruguay. Dodd, Mead and Company. pp. 228–229.