ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (Organized Crime and Corruption Reporting Project (சுருக்கமாக:OCCRP) உலகின் ஆறு கண்டங்களில் ஊழியர்களைக் கொண்ட புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் உலகளாவிய வலையமைப்பு ஆகும்.i[1] 2006ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பன்னாட்டு பன்னாட்டு அரசு-சார்பற்ற அமைப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது.
உருவாக்கம் | 2006 |
---|---|
நிறுவனர் | சுல்லிவான் மற்றும் பால் ராடு |
வகை | பன்னாட்டு அரசு-சார்பற்ற அமைப்பு |
26-0898750 | |
நோக்கம் | ஊழல் எதிர்ப்பு & குற்றத் தடுப்பு |
சார்புகள் | லாப-நோக்கமற்ற செய்திகள் நிறுவனம் (உறுப்பினர்) |
வலைத்தளம் | www |
இது உள்ளூர் ஊடகங்கள் மூலமாகவும், ஆங்கிலம் மற்றும் உருசிய மொழிகளில் மொழிகளில் வலைத்தளம் மூலமாக அதன் அறிக்கைகளை வெளியிடுகிறது. OCCRP ஐரோப்பா, ஆப்பிரிக்கா, காக்கேசியா மற்றும் நடு ஆசியாவில் உள்ள 50+ தன்னாட்சி ஊடக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதுடன், ஆதரிக்கவும் செய்கிறது. 2017ஆம் ஆண்டில் இதன் ஆலோசகர் 500 சிறந்த அரசு சாரா நிறுவனங்களின் வருடாந்திர பட்டியலில் உலகில் 69 வது இடத்தைப் பிடித்தார்.[2]
வரலாறு
தொகுஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) நிறுவனத்தை ஊடகவியலாளர்களான சுல்லிவான் மற்றும் பால் ராது ஆகியோர் 2006ஆம் ஆண்டில் இந்நிறுவினம் நிறுவப்பட்டது. 2019ஆம் ஆண்டில் இந்நிறுவனம் . தி அஜர்பைஜான் லாண்ட்ரோமேட் என்ற செய்தி அறிக்கையை தங்களின் உலகளாவிய புலனாய்வு இதழியல் வலைத்தளத்தில் வெளியிட்டது. இதற்காக அந்த வலைதளம் குளோபல் சைனிங் லைட் விருது பெற்றது.[3] மார்ச் 2022ஆம் ஆண்டில் OCCRP நிறுவனம் ருசியாவில் விரும்பத்தகாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது.[4]
பணிகள்
தொகுபுலன் விசாரணைகள்
தொகுஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்ட அமைப்பானது பல உயர்மட்ட விசாரணைகளில் ஈடுபட்டு,. கடல்சார் சேவைத் தொழில்கள், கால்பந்து சங்கங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் நடக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை அறிக்கையாக வெளியிட்டது. [5][6][7]
மேக்னிட்ஸ்கி வழக்கு
தொகு2013இல் உருசியா வரலாற்றில் மிகப்பெரிய வரி மோசடி வழக்கான மேக்னிட்ஸ்கி வழக்கை விசாரித்தது. மேலும் உருசியக் கருவூலத்திலிருந்து திருடப்பட்ட நிதி இப்போது மாஸ்கோவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு இருந்ததை அறிக்கையாக வெளியிட்டது. மேலும் இந்த குற்றச் செயலில் ஈட்டிய பணத்தின் ஒரு பகுதியை வால் ஸ்ட்ரீட்க்கு அருகில் உள்ள உயர்தர கட்டிடத்தின் கூடிய வளாகத்தை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.[8][9]அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் மோசடி நிறுவனத்திடமிருந்து $18 மில்லியன் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை எடுத்தனர்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Project, Organized Crime and Corruption Reporting. "Our Team". OCCRP (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
- ↑ "Organised Crime and Corruption Reporting Project (OCCRP) | The Magnitsky Human Rights Awards". www.magnitskyawards.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-29. பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
- ↑ "The Global Shining Light Award". gijn.org. 2016.
- ↑ ""Важные истории" и OCCRP внесли в реестр "нежелательных" организаций". meduza.io (in ரஷியன்). 2022-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
- ↑ "Private security firms in the Balkans harbor corruption, observers say". Deutsche Welle. 2010-06-19. http://www.dw-world.de/dw/article/0,,5684942,00.html.
- ↑ "Vîntu, cercetat alături de Kiss Laszlo, pentru o fraudă de 8 milioane de euro". Jurnalul Naţional. 2010-11-16 இம் மூலத்தில் இருந்து 2017-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171018032336/http://jurnalul.ro/stiri/observator/vintu-cercetat-alaturi-de-kiss-laszlo-pentru-o-frauda-de-8-milioane-de-euro-559934.html.
- ↑ "In Hungary, Corruption Continues". The Vienna Review. 2009-04-09. Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2010-12-10.
- ↑ "Magnitsky Stories". Organized Crime and Corruption Reporting Project. 2013-06-09. https://reportingproject.net/magnitsky_stories/#.
- ↑ "U.S. Seeks Forfeiture of Manhattan Real Estate Tied to Fraud". The New York Times. The Associated Press. September 10, 2013. https://www.nytimes.com/2013/09/11/nyregion/us-seeks-forfeiture-of-manhattan-real-estate-tied-to-fraud.html.
- ↑ "U.S. Seeks Seizure Of Real Estate Connected To Magnitsky Fraud Scheme". Radio Free Europe. Sep 10, 2013. http://www.rferl.org/content/us-seeks-seizure-of-manhattan-real-estate-magnitsky-fraud-scheme-prevezon/25102020.html.