ஓகே பூமர்

இணைய பகடிச் சொல்

" ஓகே பூமர் " (இந்தியாவில் பூமர் அங்கிள்) என்பது ஒரு பிடி வரி மற்றும் இணைய பகடிச் சொல் ஆகும். இது புத்தாயிரத்துக்கு முன் பிறந்தவர்களாலும் தலைமுறை ஒய் (புத்தாயிரவர்) பொதுவாக பயன்படுத்தபடுகிறது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து இரண்டு தசாப்தங்களில் பிறந்தவர்களான பேபி பூமர்கள் என்றழைக்கபடும் தலைமுறையினரின் அணுகுமுறைகளை நிராகரிக்கவும், அவர்களின் வாயடைக்க அல்லது கேலி செய்ய இது பயன்படுத்தப்பட்டது. பல தசாப்தங்களுக்கு முன்பு தோன்றி என்றோ வழக்கொழிந்து போன இந்த சொற்றொடர் 2019 நவம்பரில் வெளியான டிக்டாக் காணொளி வழியாக மீண்டும் பரவலான கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு வயதானவருக்கு பதிலளிக்கும் விதமாக பயன்படுத்தபட்டிருந்தது. வழக்கொழிந்து போனதாக கருதப்பட்ட இந்த சொற்றொடர் தொழில்நுட்ப மாற்றத்திற்கு எதிர்ப்பு, காலநிலை மாற்ற மறுப்பு, சிறுபான்மை உறுப்பினர்களை ஓரங்கட்டுதல், இளைய தலைமுறையினரின் விழுமியங்களுக்கு எதிரான பேச்சுக்கு போன்றவற்றிகு பதிலடியாக வளர்ந்துள்ளது. [1] [2] [3]

இந்த சொற்றொடர் வணிகரீதியாக வணிகப் பொருட்களை விற்கவும் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பல வர்த்தக முத்திரைகளாகவும் பயன்படுத்தபட்டது. [4]

தோற்றம் தொகு

"ஓகே பூமர்" இன் முதல் பதிவு 2009 செப்டம்பர் 29 அன்று ரெடிட் கருத்துரையில் உள்ளது, [5] இது 2015 இல் 4சான் இணையதளத்தில் தோன்றியது. [6] [7] 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சமூக ஊடகங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்ததுல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைய தலைமுறையினரைக் கண்டித்து அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் டிக்டாக்கில் பேசியதற்கு எதிர்வினையாக "ஓகே பூமர்" என்ற சொல் வெகுஜனப் பிரபலமடைந்தது. அந்த முதியவர், "புத்தாயிரவர் மற்றும் இசட் தலைமுறையில் பிறந்தவர்களுக்கு பீட்டர் பான் நோய்க்குறி (சமூக ரீதியாக முதிர்ச்சியடையாத தன்மை) உள்ளது [...] அவர்கள் எப்போதும் வளர விரும்புவதில்லை" என்று கூறினார். இந்த முந்தைய தலைமுறையினரின் தாக்குதலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் "சரி பூமர்" என்று பதிலளித்தனர். [8]

பூமர் அங்கிள் தொகு

இது இந்தியாவில் இந்தப் பகடி சொல் பூமர் அங்கிள் என்று பயன்படுத்தப்படுகிறது. உலகமயமாக்களுக்கு முந்தைய தலைமுறையில் உறவு முறையில் உள்ளவரையும், தெரிந்தவர்களையும் அழைக்கப் பயன்படுதப்பட்ட மாமா என்ற சொல் ஆங்கில வழிக் கல்விமுறையால் முன்பின் தெரியாதவர்கள், உறவினர்கள் என அனைவரையும் அங்கிள் என்று அழைக்கும் வழக்கம் உருவானது. அந்தக் காலத்தில், கலிகாலமாய் போனது, அந்தக் காலம் போல வராது போன்ற சொற்களை பயன்படுத்தி பழைய பல்லவியைப் பாடி அறிவுரை சொல்பவர்கள், சொல்லவரும் செய்தியை சவ்வுபோல இழுத்து பேசுபவர்கள், போன்றோரின் வாயை அடைக்கவும், பரிகாசம் செய்யவும் பூமர் அங்கிள் என்ற சொல் புத்தாயிரவரால் பயன்படுத்தபடுகிறது.[9] இது சிலசமயங்களில் சாதிப்பெருமை, இனப்பெருமை பேசும் பிற்போக்குவாதிகளாக உள்ள இளைஞர்களை அழைக்கவும் பயன்படுத்தபடுகிறது.[10]

குறிப்புகள் தொகு

  1. "What does OK boomer mean?". Dictionary.com. 4 November 2019. பார்க்கப்பட்ட நாள் 4 November 2019.
  2. Lorenz, Taylor (29 October 2019). "'OK Boomer' Marks the End of Friendly Generational Relations". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 4 November 2019.
  3. Rosenblatt, Kalhan (29 October 2019). "Teens use 'OK boomer' to fire back at older generations' criticisms". NBC News. பார்க்கப்பட்ட நாள் 4 November 2019.
  4. "Companies Try To Trademark 'Ok, Boomer' Expression". NPR.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  5. Hoffa, Felipe. ""OK Boomer" escalated quickly — a reddit+BigQuery report". Towards Data Science. Medium. பார்க்கப்பட்ட நாள் 24 November 2019.
  6. Romano, Aja (19 November 2019). ""OK boomer" isn't just about the past. It's about our apocalyptic future". Vox. பார்க்கப்பட்ட நாள் 24 November 2019.
  7. Franks, Josephine. "Chlöe Swarbrick explains what 'OK boomer' means". https://www.stuff.co.nz/national/117196427/chle-swarbrick-explains-what-ok-boomer-means. 
  8. Bote, Joshua (4 November 2019). "Why are Gen Z and millennials calling out boomers on TikTok? 'OK, boomer,' explained". USA Today. பார்க்கப்பட்ட நாள் 4 November 2019.
  9. ""பூமர் அங்கிள்... நீங்க எங்க இருக்கீங்க!"". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  10. ஆமா.. பூமர் அங்கிள்னா என்ன? “பேமி பூமர்” பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா -இதற்கு இப்படி ஒரு வரலாறா 25, திசம்பர், 2022 ஒன்இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓகே_பூமர்&oldid=3669085" இலிருந்து மீள்விக்கப்பட்டது