டிக்டாக் (TikTok, சீனம்: 抖音பின்யின்: Dǒuyīn; நேர்பொருளாக "vibrating sound") டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது.[3][4] ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது.[5] ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.[6]

டிக்டாக்
உருவாக்குனர்பைட்டேன்ஸ்
தொடக்க வெளியீடுசெப்டம்பர் 2016; 7 ஆண்டுகளுக்கு முன்னர் (2016-09)
அண்மை வெளியீடு15.5.42 / ஏப்ரல் 06, 2020
இயக்கு முறைமைஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம்
கோப்பளவு287.6 MB (ஐஓஎஸ்)[1] 84 MB (ஆண்ட்ராய்டு)[2]
கிடைக்கும் மொழிதமிழ், ஆங்கிலம் உட்பட பல மொழிகள்
மென்பொருள் வகைமைநிகழ்படங்கள் பகிர்தல்
உரிமம்இலவசமென்பொருள்
இணையத்தளம்tiktok.com (ஆங்கிலம்)
douyin.com (சீனம்)

தமிழகத்தில் டிக் டாக்

தொகு

டிக் டாக் செயலியின் மூலமாக ஆபாசமாக நடன அசைவுகள் இருப்பதாகவும் சமூகச் சீரழிவிற்கு வழிவகுப்பதாகவும் பலதரப்பில் இருந்து கருத்துக்கள் வந்ததன் அடிப்படையில் அதனைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.[7][8][9]

இந்தியாவில் தடை

தொகு

மதுரை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் இந்த செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, இதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "டிக்டாக்" செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து டிக்டாக் நிறுவனம், தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் ‌எழுதியுள்ளது. இதனை ஏற்று டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளேஸ்டோர் நீக்கியுள்ளது.[10][11][12]

தடை நீக்கம்

தொகு

இதைத்தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 22, 2019 அன்று விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் இந்த தடை தளர்ந்ததாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதன்படி ஏப்ரல் 22, 2019 அன்று இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஆபாச நடன அசைவுகள், சமூக சீர்க்கேடு நடன அசைவுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யக்கூடாது என நிபந்தனையுடன் டிக்டாக் செயலிக்கான தடையை நீக்கியது.[13][14]

இந்த தடை நீங்கிய பிறகு டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் பதிவிறக்கம் செய்யும் வசதி மீண்டும் கொண்டுவரப்பட்டது.[15]

இந்திய அரசு தடை செய்தல்

தொகு

இச்செயலியானது தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செயலிகளுக்கு 29 சூன், 2020 அன்று இந்திய அரசு அதிரடியாக தடை செய்தது. பின்பு டிக்டாக் செயலியை பிளேஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களிலிருந்து நீக்கப்பட்டது.[16]

சான்றுகள்

தொகு
 1. "TikTok - Real Short Videos". App Store.
 2. "TikTok". Play Store.
 3. "டூயின் மிகப் பரவலான இயக்குதளமாக அறியப்படுமா?" (in en-US). Jing Daily. 2018-03-11. https://jingdaily.com/douyin-luxury-brands/. 
 4. "டூயின் எப்படி பரவலான வரவேற்பைப் பெற்றது" (in en-US). டெக்நோட். 2018-05-10. https://technode.com/2018/05/10/how-douyin-became-the-most-popular-app-in-the-world/. 
 5. "இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட டூயின்". en.prnasia.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.
 6. "Tik Tok, a Global Music Video Platform and Social Network, Launches in Indonesia". https://en.prnasia.com/releases/apac/Tik_Tok_a_Global_Music_Video_Platform_and_Social_Network_Launches_in_Indonesia-187963.shtml. 
 7. "டிக் டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்தல்". தினத்தந்தி.
 8. "காவல் நிலையத்தில் டிக்டாக்". தந்தி. Archived from the original on 2019-03-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
 9. "டிக்டாக்கில் ஆபாசமான முறையில் நடித்தல்". புதிய தலைமுறை.
 10. "'டிக் டாக்' தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு". தினமலர் (15 ஏப்ரல், 2019)
 11. ""டிக் டாக்' செய தடை உத்தரவில் மாற்றம் இல்லை". தினமணி (17 ஏப்ரல், 2019)
 12. "டிக்-டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு". மாலைமலர் (17 ஏப்ரல், 2019 )
 13. "சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் அகற்றப்படும் என உறுதிமொழி டிக்டாக் செயலிக்கான தடை நீக்கம்: ஐகோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு". Archived from the original on 2019-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-05-03. தினகரன் (25 ஏப்ரல் 2019)
 14. "டிக்டாக் மீதான தடை நிபந்தனையோடு நீக்கம்". தினமலர் (24 ஏப்ரல் 2019)
 15. "தடை நீக்கம்: மீண்டும் பிளே ஸ்டோருக்கு வந்தது டிக்டாக் செயலி!".
 16. "டிக் டாக் தடை: தரவு பாதுகாப்பு குறித்து தெளிவுப்படுத்துவதற்கு அரசு தரப்பில் அழைப்பு!".

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்டாக்&oldid=3919707" இலிருந்து மீள்விக்கப்பட்டது