பேபி பூமர்கள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் பிறந்த மக்கள்தொகைக் குழுவைச் சேர்ந்த தலைமுறையி

பேபி பூமர்கள், பெரும்பாலும் பூமர்கள் (Baby boomers, often shortened to boomers) என்று சுருக்கமாக அழைக்கபடுபவர்கள். இவர்கள் அமைதி தலைமுறையினருக்கு அடுத்து வந்தவர்களாகவும் எக்சு தலைமுறைக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மக்கள்தொகைக் குழுவினராவர். இந்தத் தலைமுறையானது 1946 முதல் 1964 வரை, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்தவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். [1] இவர்களின் காலம், மக்கள்தொகை சூழல், பண்பாட்டு அடையாளங்கள் போன்றவை நாடுகளைப் பொறுத்து மாறுபடலாம். [2] பெரும்பாலான பேபி பூமர்கள் சிறந்த தலைமுறை அல்லது அமைதி தலைமுறையினரின் பிள்ளைகளாவர். மேலும் இவர்கள் பெரும்பாலும் எக்சு தலைமுறை மற்றும் புத்தாயிரவரின் பெற்றோராவர். [3]

மேற்குலகில், 1950கள் மற்றும் 1960களில் பூமர்களின் குழந்தைப் பருவக் கல்வியில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளபட்டன. இவை இரண்டு கருத்தியல் மோதல்களின் பகுதியாக பனிப்போர், [4] மற்றும் போர்க் காலத்தின் தொடர்ச்சியாகும்.[5] 1960கள் மற்றும் 1970களில், ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தங்கள் பதின்ம வயதிலும் இளமைப் பருவத்திலும் 18 வயதை எட்டியபோது-அவர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அந்தக் கூட்டத்தைக் குறிக்க ஒரு குறிப்பிட்ட சொல்லாட்சியை உருவாக்கினர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் போருக்கு சென்றவர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர். அடுத்து வந்த 20 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. அதை ஒரு 'பூம்' என்று வருணித்தனர். இதையடுத்து வந்த காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை வீக்கத்தின் காரணமாக உலகில் ஆழமான அரசியல் உறுதியற்ற நிலையை உருவானது. [6] [7] சீனத்தில், பூமர்கள் பண்பாட்டுப் புரட்சி காலத்தில் வாழ்ந்தனர். அவர்கள் பெரியவர்களான சமயத்தில் ஒரு குழந்தைக் கொள்கையே ஏற்றனர். [8] இந்தத் தலைமுறையினர் அதன் முந்தைய தலைமுறையினரை விட முன்பூப்பு மற்றும் அதிகபட்ச உயரத்தை அடைந்தனர்.

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Sheehan, Paul (26 September 2011). "Greed of boomers led us to a total bust". The Sydney Morning Herald. https://www.smh.com.au/politics/federal/greed-of-boomers-led-us-to-a-total-bust-20110925-1krki.html. 
  2. Little, Bruce; Foot, David K.; Stoffman, Daniel (1998). "Boom, Bust & Echo: How to Profit from the Coming Demographic Shift". Foreign Policy (113): 110. doi:10.2307/1149238. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-7228. https://archive.org/details/sim_foreign-policy_winter-1998-99_113/page/110. 
  3. Rebecca Leung (4 September 2005). "The Echo Boomers – 60 Minutes". CBS News. https://www.cbsnews.com/stories/2004/10/01/60minutes/main646890.shtml. 
  4. Stroke, H. Henry (August 1, 2013). "Electricity and Magnetism". Physics Today 66 (8): 48. doi:10.1063/PT.3.2085. Bibcode: 2013PhT....66R..48S. https://physicstoday.scitation.org/doi/10.1063/PT.3.2085. பார்த்த நாள்: October 11, 2020. 
  5. Gispert, Hélène. "L'enseignement des mathématiques au XXe siècle dans le contexte français". CultureMATH (in பிரெஞ்சு). Archived from the original on July 15, 2017. பார்க்கப்பட்ட நாள் November 4, 2020.
  6. Suri, Jeremi (February 2009). "The Rise and Fall of an International Counterculture, 1960-1975". American Historical Review 114 (1): 45–68. doi:10.1086/ahr.114.1.45. https://archive.org/details/sim_american-historical-review_2009-02_114_1/page/45. 
  7. Turchin, Peter (February 3, 2010). "Political instability may be a contributor in the coming decade". Nature 403 (7281): 608. doi:10.1038/463608a. பப்மெட்:20130632. Bibcode: 2010Natur.463..608T. 
  8. "The unprecedented aging crisis that's about to hit China". https://www.pbs.org/newshour/show/unprecedented-aging-crisis-thats-hit-china. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபி_பூமர்கள்&oldid=3699949" இலிருந்து மீள்விக்கப்பட்டது