ஓக்காப்பி
ஓக்காப்பி | |
---|---|
ஓக்காப்பி (ஒகாபீ) விலங்கினம், டிஸ்னி விலங்குலகம், ஃபுளோரிடா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Artiodactyla
|
குடும்பம்: | Giraffidae
|
பேரினம்: | ஒகாபியா Ray Lankester, 1901
|
இனம்: | ஒகாபியா ஜான்ஸ்டொனீ
|
இருசொற் பெயரீடு | |
ஒகாபியா ஜான்ஸ்டொனீ (P.L. Sclater, 1901) | |
Range map |
ஓக்காப்பி அல்லது ஒகாபீ என்பது ஒட்டகச் சிவிங்கி வகையைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. இது மத்திய ஆபிரிக்காவிலுள்ள காங்கோ நாட்டின் வடகிழக்கே உள்ள இட்ரு (itru) மழைக்காட்டை பூர்வீகமாகக்கொண்டது. ஓக்காப்பியின் உடலில் வரிக்குதிரை யைப் போன்று கோடுகள் இருப்பினும், இது ஒட்டகச்சிவிங்கி இனத்திற்கு நெருக்கமானதாகும். முன்கால்களில் வரிக்குதிரையைப் போல கருப்பு நிறக் குவிப்பைக் கொண்டிருந்தாலும், தலை ஒட்டக சிவிங்கியைப் போலக் கொண்டிருக்கிறது. ஆண் ஓக்காப்பிகள் சிறிய கொம்பைக் கொண்டுள்ளன, பெண் ஒக்காபிகளுக்கு சிறிய புட்ப்பு மட்டமே உண்டு, ஒட்டகசிவிங்கியைப் போலவே நிமிர்நுத் நிற்கும் காதுகளைக் கொண்டிருக்கிறது. நுண்ணிய ஒலி அளவுகளையும் கூட எளிதில் உணரும் ஆற்றல் மிக்கவை. ஒட்டக சிவிங்கியை ஒத்த கருப்புநிற நாக்கினையும் கொண்டிருக்கிறது. வரிகளும், கலவையான வண்ணங்களும் இவ்விலங்கினங்களுக்கு சிறந்த உருமறைக் காரணிகளாக இருக்கின்றன.
ஓக்காப்பிகள் மிக நீண்ட நாக்கினைக் கொண்டுள்ளதால் எட்டியுள்ள இலை தழைகளை இழுத்து உண்ண ஏதுவாகிறது. நாக்கு நீளமாக இருப்பதால் கண் வரை எட்டும். தனது கண்களை தானே நக்க இயலும் விலங்கு இது ஒன்றே. ஓக்காப்பி 1.9 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை வளரும். 200 முதல் 270 கிலோ எடை வரை இருக்கும். இது ஒரு தாவர உண்ணி விலங்கு. மேற்கு ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில், புதிதாக முளைக்கும் இளந்தளிர்களின் மொட்டுக்களையும், இலைகளையும் விரும்பி உண்டு உயிர்வாழ்கின்றது. எல்லைகளை நிர்ணயம் செய்யவும், தனது இருப்பினைத் தெரிவிக்கவும் ஒருவித இரசாயனப் பொருளை (பெரமோன்) பாதங்களில் சுரக்கவிடுவதன் மூலமாக பிற விலங்கினங்களோடு தொடர்பு கொள்கின்றது.[2] பெண் ஒக்காபிகள் 14 மாதங்கள் முதல் 16 மாதங்கள் வரை கருவைச் சுமந்து குட்டியை ஈனுகின்றன. இவை 20முதல் 30 ஆண்டுகள் வரை வாழக்கூடியன.
1887 இல் பத்திரிகைகள் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட திரு ஹென்ரி மொர்டொன் சுடான்லி அவர்களின் பயணக்குறிப்பேடுகளின் மூலம் ஓக்காப்பி பற்றி மேற்குலகம் அறிந்துகொண்டது. 1901 இல் இங்கிலாந்தை சேர்ந்த திரு ஹரி ஜொன்ச்டொன் இறந்த ஓக்காப்பியின் உடலை லண்டன் நகரத்துக்கு அனுப்பிவைத்தார். இது பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வெளிவந்து மக்கள் மத்தியில் ஓக்காப்பி இனத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டியது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 20,000 ஓக்காப்பிகள் இட்ரு காடுகளில் உயிர் வாழ்கின்றன. 42 நாடுகளின் மிருகக்காட்சி சாலைகளிலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Antelope Specialist Group (2008). "Okapia johnstoni". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Database entry includes a brief justification of why this species is endangered.
- ↑ MAMMALS. M.M.PUBLICATIONS. 2011 APRIL. p. 53.
{{cite book}}
: Check date values in:|year=
(help)