ஓசுமியம்(II) குளோரைடு

வேதிச் சேர்மம்

ஓசுமியம்(II) குளோரைடு (Osmium(II) chloride) என்பது OsCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

ஓசுமியம்(II) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஓசுமியம்(II) குளோரைடு
வேறு பெயர்கள்
ஓசுமியம் இருகுளோரைடு, ஓசுமியம் டைகுளோரைடு
இனங்காட்டிகள்
13444-92-3 Y
ChemSpider 379789
InChI
  • InChI=1S/2ClH.Os/h2*1H;/q;;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 429382
  • Cl[Os]Cl
பண்புகள்
OsCl2
வாய்ப்பாட்டு எடை 261.14 கி/மோல்
தோற்றம் அடர் பழுப்பு திண்மம்
அடர்த்தி 4.38 கி/செ.மீ3
உருகுநிலை 450 °C (842 °F; 723 K)
பெரும்பாலும் கரையாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஓசுமியம் இருபுரோமைடு]
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(II) குளோரைடு
பலேடியம்(II) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


தயாரிப்பு

தொகு

ஓசுமியம்(III) குளோரைடு சேர்மத்தை வெற்றிடத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் விகிதச்சம்நிலைமாற்றம் நிகழ்ந்து . ஓசுமியம்(II) குளோரைடு உருவாகும்.[2]

2OsCl3 → OsCl4 + OsCl2

இயற்பியல் பண்புகள்

தொகு

ஓசுமியம்(II) குளோரைடு நீரில் கரையாத ஒரு நீருறிஞ்சும் அடர் பழுப்பு நிற திண்மப் பொருளாகும்.[3]

எத்தனால் மற்றும் ஈதர் ஆகிய கரைப்பான்களில் ஓசுமியம்(II) குளோரைடு கரையும்.[4]

வேதிப் பண்புகள்

தொகு

ஓசுமியம்(II) குளோரைடு கந்தக அமிலம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் ஆகிய அமிலங்களுடன் வினை புரியாது. 220 பாகை செல்சியசு வெப்பநிலையில் கார்பன் மோனாக்சைடுடன் வினைபுரிகிறது.

OsCl2 + 3CO → Os(CO)3Cl2

பயன்கள்

தொகு

வினையூக்க வினைகளின் மூலம் மூவல்கைலமீன்கள் தயாரிப்பில் ஓசுமியம்(III) குளோரைடு பயன்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 613. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  2. Singh, G. (2007). Chemistry Of Lanthanides And Actinides (in ஆங்கிலம்). Discovery Publishing House. p. 307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8356-241-6. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  3. Leddicotte, G. W. (1961). The Radiochemistry of Osmium (in ஆங்கிலம்). Subcommittee on Radiochemistry, National Academy of Sciences-National Research Council; available from the Office of Technical Services, Department of Commerce. p. 5. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  4. Comey, Arthur Messinger (1896). A Dictionary of chemical solubilities (in ஆங்கிலம்). Macmillan and Company. p. 275. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  5. Macintyre, Jane E. (5 December 1996). Dictionary of Inorganic Compounds, Supplement 4 (in ஆங்கிலம்). CRC Press. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-75020-5. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்(II)_குளோரைடு&oldid=3789204" இலிருந்து மீள்விக்கப்பட்டது