ஓசுமியம் ஆக்டாபுளோரைடு

வேதிச் சேர்மம்

ஓசுமியம் ஆக்டாபுளோரைடு (Osmium octafluoride) என்பது OsF8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[3][4] சில சான்றுகள் ஓசுமியம் ஆக்டாபுளோரைடை கருத்தியலான சேர்மமாகவே கருதுகின்றன.[5] OsF8 தயாரிப்பின் ஆரம்ப கால அறிக்கையானது விளைபொருளானது OsF6 இன் தவறான அடையாளமாகக் காட்டப்பட்டது.[6] கோட்பாட்டு பகுப்பாய்வு முடிவு ஓசுமியம் ஆக்டாபுளோரைடு தோராயமாக சதுர தளம் கொண்ட எதிர்ப்பட்டக மூலக்கூறு வடிவவியலைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறது.[7]

ஓசுமியம் ஆக்டாபுளோரைடு

கணக்கீடு மூலம் தோராயமான வடிவவியல் கணிக்கப்பட்டது
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாபுளோரோ ஓசுமியம்[1]
வேறு பெயர்கள்
ஓசுமியம்(VIII) புளோரைடு
இனங்காட்டிகள்
18432-81-0
InChI
  • InChI=1S/8FH.Os/h8*1H;/q;;;;;;;;+8/p-8
    Key: ZTSGTWBSMBQRNE-UHFFFAOYSA-F
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57496620
  • F[Os](F)(F)(F)(F)(F)(F)F
பண்புகள்
OsF8
வாய்ப்பாட்டு எடை 342.22 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு C2/c (4 கிகாபாசுக்கல்)
R3 (240 கிகாபாசுக்கல்)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஓசுமியத்தையும் புளோரினையும் சேர்த்து வேகமாக குளிரூட்டப்பட்டால் ஓசுமியம் ஆக்டாபுளோரைடு உருவாகும்.:[8]

Os + 4 F2 → OsF8

மேற்கோள்கள்

தொகு
  1. https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/57496620
  2. Lin, Jianyan; Du, Xin; Rahm, Martin; Yu, Hong; Xu, Haiyang; Yang, Guochun (25 March 2020). "Exploring the Limits of Transition‐Metal Fluorination at High Pressures". Angewandte Chemie International Edition 59 (23): 9155–9162. doi:10.1002/anie.202002339. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. பப்மெட்:32150319. 
  3. Routledge German Dictionary of Chemistry and Chemical Technology Worterbuch Chemie und Chemische Technik: Vol 1: German-English (in ஆங்கிலம்). Routledge. 17 June 2014. p. 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-76231-4. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  4. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  5. Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065933-7. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
  6. Riedel, S.; Kaupp, M. (30 Jul 2009). "The highest oxidation states of the transition metal elements". Coordination Chemistry Reviews 253 (5–6): 606–624. doi:10.1016/j.ccr.2008.07.014. 
  7. Riedel, Sebastian; Kaupp, Martin (2006). "Where Is the Limit of Highly Fluorinated High-Oxidation-State Osmium Species?". Inorg. Chem. 45 (26): 10497–10502. doi:10.1021/ic061054y. பப்மெட்:17173405. 
  8. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 612. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்_ஆக்டாபுளோரைடு&oldid=3790434" இலிருந்து மீள்விக்கப்பட்டது