ஓசுமியம் இருபாசுபைடு
வேதிச் சேர்மம்
ஓசுமியம் இருபாசுபைடு (Osmium diphosphide) என்பது OsP2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓசுமியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
12037-59-1 | |
பண்புகள் | |
OsP2 | |
வாய்ப்பாட்டு எடை | 252.18 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 9.33 கி/செ.மீ3 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசிவப்பு பாசுபரசுடன் விகிதவியல் அளவில் ஓசுமியத்தைச் சேர்த்து 500-1000 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி வினைபுரியச் செய்தால் தனிமங்கள் இணைந்து ஓசுமியம் இருபாசுபைடு உருவாகும்:
- Os + 2P → OsP2
இயற்பியல் பண்புகள்
தொகுஓசுமியம் இருபாசுபைடு P nnm என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுர படிக அமைப்பில் கருப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.[1]
பயன்கள்
தொகுஓசுமியம் இருபாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "mp-2319: P2Os (orthorhombic, Pnnm, 58)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
- ↑ Bugaris, Daniel E.; Malliakas, Christos D.; Shoemaker, Daniel P.; Do, Dat T.; Chung, Duck Young; Mahanti, Subhendra D.; Kanatzidis, Mercouri G. (15 September 2014). "Crystal Growth and Characterization of the Narrow-Band-Gap Semiconductors OsPn 2 (Pn = P, As, Sb)" (in en). Inorganic Chemistry 53 (18): 9959–9968. doi:10.1021/ic501733z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/10.1021/ic501733z. பார்த்த நாள்: 11 March 2024.