ஓசுமியம் டெட்ராபுரோமைடு

வேதிச் சேர்மம்

ஓசுமியம் டெட்ராபுரோமைடு (Osmium tetrabromide) OsBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாக ஓசுமியம் டெட்ராபுரோமைடு காணப்படுகிறது. அழுத்தத்ஹின் கீழ் ஓசுமியம் நாற்குளோரைடுடன் புரோமினைச் சேர்த்து வினைபுரியச் செய்து ஓசுமியம் டெட்ராபுரோமைடு தயாரிக்கப்படுகிறது.

ஓசுமியம் டெட்ராபுரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓசுமியம்(IV) புரோமைடு
இனங்காட்டிகள்
59201-52-4 Y
ChemSpider 21494153
InChI
  • InChI=1S/4BrH.Os/h4*1H;/q;;;;+4/p-4
    Key: MPVSPHKBQDMOHE-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101978335
  • [Br-].[Br-].[Br-].[Br-].[Os+4]
பண்புகள்
OsBr4
வாய்ப்பாட்டு எடை 509.85 கி·மோல்−1
தோற்றம் கருப்பு நிற திண்மம்
அடர்த்தி 5.95 கி/செ,மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கட்டமைப்பு

தொகு

ஓசுமியம் டெட்ராபுரோமைடு ஒரு கனிம வேதியியல் பலபடி என்று எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் தீர்மானிக்கின்றன. பிளாட்டினம் டெட்ராபுரோமைடு மற்றும் டெக்னீசியம் டெட்ராகுளோரைடு ஆகியவற்றுடன் இதன் கட்டமைப்பு ஒத்தவடிவம் கொண்டுள்ளது. எனவே, ஓசுமியம் எண்முக ஒருங்கிணைப்பில் உள்ளது எனலாம். ஒவ்வொரு ஓசுமிய மையமும் நான்கு இரட்டிப்பு பால புரோமைடு ஈந்தணைவிகள் மற்றும் இரண்டு ஒன்றிற்கொன்று பரிமாற்றம் செய்து கொள்ளும் சிசு விளிம்புநிலை புரோமைடு ஈந்தணைவிகளூடன் பிணைந்துள்ளன.[1]

தொடர்புடைய சேர்மங்கள்

தொகு

ஓசுமியம்(III) புரோமைடு மட்டுமே படிகமாக்கப்பட்டுள்ள இதர இரும ஓசுமியம் புரோமைடு சேர்மமாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Thiele, G.; Wochner, H.; Wagner, H. (1985). "Über Osmiumbromide". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 530 (11): 178–186. doi:10.1002/zaac.19855301121. 
  2. Köhler, J. (2014). "Halides: Solid-State Chemistry". Encyclopedia of Inorganic and Bioinorganic Chemistry. pp. 1–22. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781119951438.eibc0078.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781119951438.