ஓசுமியம் பெண்டாகார்பனைல்

வேதிச் சேர்மம்

ஓசுமியம் பெண்டாகார்பனைல் (Osmium pentacarbonyl) என்பது Os(CO)5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம ஓசுமியம் சேர்மமான இச்சேர்மம் ஓசுமியத்தின் எளிமையான தனிமைப்படுத்தக்கூடிய கார்பனைல் அணைவுச் சேர்மமாகக் கருதப்படுகிறது. ஓசுமியம் பெண்டாகார்பனைல் நிறமற்ற ஆவியாகும் திரவமாகும். 280-290 பாகை செல்சியசு வெப்பநிலையில் 200 வளிமண்டல அழுத்தத்தில் கார்பன் மோனாக்சைடின் கீழ் திண்ம டிரை ஓசுமியம் டோடெக்காகார்பனைலைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூகம் ஓசுமியம் பெண்டாகார்பனைல் உற்பத்தி செய்யப்படுகிறது. மாறாக, 200 வளிமண்டல அழுத்தத்தில் கார்பன் மோனாக்சைடின் கீழ் திண்ம டிரை ருத்தேனியம் டோடெக்காகார்பனைலைச் (Ru3(CO)12) சேர்த்து 160 ° செல்சியசு வெப்பநிலையில் Ru(CO)5 ஆக மாறுகிறது. .[1]

ஓசுமியம் பெண்டாகார்பனைல்
இனங்காட்டிகள்
16406-49-8
ChemSpider 65793451
InChI
  • InChI=1S/5CO.Os/c5*1-2;
    Key: RLUHVGZGDXPTEM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10892861
  • C(=O)=[Os](=C=O)(=C=O)(=C=O)=C=O
பண்புகள்
C5O5Os
வாய்ப்பாட்டு எடை 330.28 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை 2–2.5 °C (35.6–36.5 °F; 275.1–275.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைகள்

தொகு
 
Os2(CO)9 சேர்மத்திற்கு முன்மொழியப்பட்ட கட்டமைப்பு [2]

ஓசுமியம் பெண்டாகார்பனைல் மாதிரிகளை 80 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது மீண்டும் டிரை ஓசுமியம் கொத்துக்கு மாறுகிறது. Ru(CO)5 சேர்மத்தை மீண்டும் Ru3(CO)12 சேர்மமாக மாற்றுவது அறை வெப்பநிலையில் நிகழ்கிறது.[1] பெண்டாகார்பனைல் சேர்மத்தை குளோரினேற்றம் செய்தால் ஒரு நேர்மின் அயனி பெண்டாகார்பனைல் அணைவுச் சேர்மத்தை அளிக்கிறது:[1]

Os(CO)5 + Cl2 → [Os(CO)5Cl]+Cl

புற ஊதா கதிர்வீச்சின் போது, ​​பெண்டாகார்பனைல் எக்சேன் கரைசல்கள் எத்திலீனுடன் வினைபுரிந்து மோனோ-, டை - மற்றும் டிரை என பதிலீடு செய்யப்பட்ட வழிப்பெறுதிகளைக் கொடுக்கின்றன:[3]

Os(CO)5 + n C2H4 → Os(CO)5-n(C2H4)n + n CO (n = 1,2,3)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Rushman, Paul; Van Buuren, Gilbert N.; Shiralian, Mahmoud; Pomeroy, Roland K. (1983). "Properties of the Pentacarbonyls of Ruthenium and Osmium". Organometallics 2 (5): 693–694. doi:10.1021/om00077a026. 
  2. Moss, John R.; Graham, William A. G. (1977). "The Enneacarbonyls of Ruthenium and Osmium". Journal of the Chemical Society, Dalton Transactions: 95. doi:10.1039/DT9770000095. 
  3. Kiel, Gong Yu; Takats, Josef; Grevels, Friedrich Wielhelm (1987). "Multisubstitution of Os(CO)5 by ethylene: Isomeric Os(CO)2(C2H4)3 and a Derivative of Os(CO)(C2H4)4". Journal of the American Chemical Society 109 (7): 2227–2229. doi:10.1021/ja00241a075.