ஒசூர் சங்கரநாராயண சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
(ஓசூர் சங்கரநாராயண சுவாமி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒசூர் சங்கரநாராயண சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:நேதாஜி ரோடு, ஓசூர், ஓசூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஓசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:சங்கரநாராயணசுவாமி
தாயார்:பார்வதி தேவி
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் தோற்றம் குறித்த கதை பின்வறுமாறு காசியில் இருந்து ஐந்து லிங்கங்கள் இங்கு கொண்டுவரப்பட்டன. இவை ஜலகண்டேசுவரர் என்ற பெயரில் ஒன்றும், காசி விசுவநாதர் என்ற பெயரில் மற்றொன்றும் ஒசூர் நகரில் பிரதிட்டை செய்யப்பட்டன. பார்வதேசுவரர் என்ற பெயரில் கெலமங்கலத்திலும், கல்கொண்டபள்ளியில் மற்றொன்றுமாக நான்கு லிங்கங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. பின்னர் ஐந்தாவது லிங்கமானது சங்கரநாராயணர் என்ற பெயரில் ஒசூரில் பிரதிட்டைச் செய்யப்பட்டது. இந்த லிங்கங்களை பிரதிட்டை செய்த மகான் சங்கர நாராயணபூதி என்பவராவார்.[2]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய கூறுகளைக் கொண்டதாக உள்ளது. கருவறையில் உள்ள சங்கரநாராயணர் குடைபிடித்த நாகத்துடன் சிறிய லிங்க வடிவில் உள்ளார். பார்வதி தேவிக்கு தனி சந்நிதி உள்ளது. கோயில் பரகாரத்தில் விநாயகர், ஆறுமுகர், வீரபத்திரர், கமண்டலேசுவரர், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. மேலும் ஆதிசங்கரருக்கு இங்கு தனியாக சிலையும் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

படவரிசை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 71–72. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)