ஓடத்தில் பள்ளி

கேரள பள்ளிவாசல்

ஓடத்தில் பள்ளி (ஓடத்தில் பள்ளிவாசல்) (Odathil Palli) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளதில் உள்ள தலச்சேரி நகரத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆகும். இந்த பள்ளிவாசல் 1806 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[1]

வரலாறு

தொகு

200 ஆண்டுகள் பழமையான இந்த ஒடத்தில் பள்ளி மற்றும் பூங்கா தலசேரியின் இதயப் பகுதியில் உள்ளது. ஓடதில் பள்ளி அமைந்த இடம் டச்சுக்காரர்களின் கரும்பு தோட்டமாக இருந்தது. இது பின்னர் பிரித்தானியருக்கு சொந்தமான கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்கு மாறியது.

முஸ்லீம் கேரளரான மூசாககா கிழக்கிந்திய கம்பெனியின் ஒப்பந்தக்காரராக இருந்தார். தலசேரியின் கீய் குடும்பத்தைச் சேர்ந்தவர் மூசாக்கா . அக்காலத்தின் முக்கிய வர்த்தகர்களில் ஒருவராக இருந்தனர்.

மூசாககா மிகவும் நேர்மையானவர், நம்பகமானவர் என்று கருதப்பட்டார். எனவே, அவரது விசுவாசத்திற்கு வெகுமதி அளிக்க நிறுவனம் விரும்பியது. அவரது வேண்டுகோளின்படி, அவருக்கு டச்சு கரும்புத் தோட்டம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மூசாககா இந்த நிலத்தை இலவசமாக பெற விரும்பாததால், ஒரு சிறிய தொகை கொடுத்து விலைக்கு வாங்கினார்.

சொற்பிறப்பியல்

தொகு

முன்பு டச்சுகார்ர்களுக்கு சொந்தமாகவும், பின்னர் ஆங்கிலேயருக்கு சொந்தமாகவும் தலசேரியில் இருந்த 'கரிம்பின்-ஓடம்' ( கரும்புத் தோட்டம்) பகுதியில் ஒரு அழகான பள்ளிவாசலைக் கட்டினார். ஓடம் என்றால் மலையாளத்தில் 'தோட்டம்' என்று பொருள். ஓடத்தில் கட்டப்பட்டதால், இந்த பள்ளிவாசல் ஓடதில் பள்ளி என்று அழைக்கப்பட்டது. அதாவது 'ஓடத்தில் பள்ளிவாசல்'. இது அச்சு அசல் கேரள பாணியில் கட்டபட்ட இந்த பள்ளிவாசல். இதன் மேற்கூரை செப்புத் தகடால் வேயப்பட்டது. குவிமாடம் தங்கத்தால் செய்யபட்டிருந்தது. மேலும் பிராமணிய பாரம்பரியத்தில் கட்டபட்டதைப் போன்ற அழகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆகவே பிற பள்ளிவாசல்களுக்கே உரிய முட்டை வடிவ குவிமாடம், தூபி போன்றவை இங்கு கிடையாது. அந்த நாட்களில் நிலவிய சமய நல்லிணக்கத்தையும், கேரள ஆட்சியாளர்கள் பின்பற்றிய சகிப்புத்தன்மைக் கொள்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்யலாம். கபரிஸ்தானில் (மசூதியை ஒட்டியுள்ள கல்லறை) கீஸ் குடும்பத்துக்கு உரியவர்களின் சடலங்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்

தொகு

ஓடத்தில் பள்ளியானது சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடம் என்றாலும், உள்ளே முசுலீம்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் வெளியில் இருந்து பார்க்கலாம். ஓடத்தில் பள்ளியின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், இது தனிச்சிறப்பான கேரளக் கட்டிடக்கலையால் கட்டபட்டுள்ளது. மேலும் இது தலிச்சேரியின் இதயப்பகுதியில் உள்ளது. கூரையின் சிகரம் தங்கத்தால் ஆனது. சுவர்கள் மரத்தால் வேயப்பட்டது. இந்த பள்ளிவாசல் இன்றும் வழிபாடு பயன்பாட்டில் உள்ளது. பள்ளிவாசலுக்கு முக்கியமாக மூன்று பாதைகள் உள்ளன. முதலாவது தலசேரி பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள முதன்மை வாயில் வழியாக. அடுத்தது லோகன்ஸ் சாலை வழியாகவும், மூன்றாவது ஓ.வி. சாலையுடன் இணைக்கப்பட்ட கட்டிடத்தின் கொல்லைப்புற வழியும் ஆகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடத்தில்_பள்ளி&oldid=4165155" இலிருந்து மீள்விக்கப்பட்டது