ஓட்டுநர் உரிமம் (இந்தியா)

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் (Driving licence in India) நெடுஞ்சாலைகளிலும் வேறு பல சாலைகளிலும் பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களை செலுத்த அதிகாரமளிக்கும் ஓர் அடையாள ஆவணம் ஆகும். பல்வேறு இந்திய மாநிலங்களில் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் / அலுவலகங்கள் அடையாள ஆவணங்கள் வழங்கும் பணியை நிர்வகிக்கின்றன. 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்ட வரையறையின் படி எந்த ஒரு நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகளில் வாகனத்தை செலுத்தும் எந்த நபரும் இந்தியாவில் ஓர் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும்.

நவீன புகைப்பட ஓட்டுநர் உரிமமானது அடையாள அட்டை இல்லாத தருணங்களில் அடையாளம் காணல் ஒரு வங்கிக் கணக்கை தொடங்க, வயது மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணமாக, கைபேசி இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது போன்ற பல்வேறு அடையாள அட்டை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தபடுகிறது.

பின்னணி

தொகு

இந்தியாவில் 16 வயதை அடைந்த எவரும் தற்காலிக ஓட்டுநர் உரிமம் பெருவதற்காக விண்ணப்பிக்கலாம். மொபெட் எனப்படும் இயந்திரம் பொருத்தப்பட்ட மிதிவண்டி அல்லது கியர் எனப்படும் பற்சக்கரங்களற்ற வாகனத்தை செலுத்துவதற்கு இந்த தற்காலிக உரிமம் செல்லுபடியாகும் [1]. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய எவரும் கார் ஓட்டுநர் உரிமம் பெருவதற்காக விண்ணப்பிக்கலாம் [2]. அனைத்து இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒருவர் இந்தியா முழுவதும் வாகன்ங்களை இயக்கும் அனுமதி பெற்றவராக அங்கீகரிக்கப்படுகிறார் [3]. வணிக ரீதியாக போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு மோட்டார் வாகனச் சட்டம், 1988 ஆம் ஆண்டின் எசு.3 (1) பிரிவின் கீழ் ஒருவர் ஓட்டுநர் உரிமத்தில் சிறப்பு ஒப்புதல் பெறுதல் வேண்டும். இதற்கான ஓட்டுநர் உரிமம் பெருவதற்கு அவர் சாலையில் வாகனம் செலுத்தும் சோதனை மேற்கொள்ளுதல் வேண்டும் முன்னதாக வாய்மொழித் தேர்வு அல்லது எழுத்துத் தேர்வு சோதனை (மாநிலத்தைப் பொறுத்து), சாலை சமிக்ஞ்சை சோதனை தொடர்ந்து கண்காணிக்கப்படும் ஓட்டுநர் சோதனை ஆகியவற்றுக்கு உட்படுதல் வேண்டும் [4]..இவ்வாறு வழங்கப்படும் தற்காலிக உரிமமும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

ஒரு குறிப்பிட்ட வகை வாகனத்தின் தற்காலிக உரிமங்களுடன் கீழ்கண்ட நிபந்தனைகள் இணைக்கப்பட்டிருக்கும் :[2].

  • வாகனத்தின் முகப்பு மற்றும் பின்பகுதியில் கற்பவர் என்பதைக் குறிக்கும் எல் எண் தகடு வெளிப்படையாக காட்டப்பட வேண்டும்.
  • குறிப்பிட்ட வகை வாகனங்களை மட்டுமே செலுத்தப் பழக வேண்டும். ஓட்டுநர் பயிற்சியின் போது ஒரு முழு ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவரை உடன் வைத்து பயிற்சி பெறுதல் வேண்டும். தனியாக ஒரு நபருக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட சில வகைகளான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு பயிற்சி பெற்றவரை அருகில் வைத்து பழகுதல் வேண்டும்.
  • பேருந்து ஓட்டுநர் பயிற்சி பெறும் ஒருவர் வழிகாட்டும் அல்லது பயிற்சி தரும் நபரை தவிர வேறு எந்த பயணிகளையும் கொண்டு செல்லக்கூடாது.

ஓட்டுநர் சோதனையில் தேர்ச்சி பெற்ற பிறகு தற்காலிக உரிமத்தை ஒப்படைத்து முழுமையான இந்திய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களைப் பயன்படுத்த இவ்வுரிமம் அனுமதிக்கும். உரிமம் பெற்ற தேதியிலிருந்து 20 ஆண்டுகளுக்கு அல்லது உரிமதாரர்களுக்கு 50 வயதை எட்டும் வரை உரிமம் செல்லுபடியாகும். காலாவதி ஆன ஓட்டுநர் உரிமத்தினை புதுபித்தல் கட்டாயம் ஆகும்[5].

கோட்பாட்டு சோதனை

தொகு

ஒரு நபர் தற்காலிக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது அடிப்படை ஓட்டுநர் விதிகள் குறித்த சோதனைகள் போக்குவரத்து அதிகரிகளால் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் கோட்பாட்டு சோதனை அடிப்படை சாலை அடையாள கேள்விகளைக் கொண்டுள்ளது, அவை கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சோதனைகளுக்கு சமமானவையாகும். பலவாய்ப்பு தேர்வு கேள்விகள் - சாத்தியமான பதில்களுடன் 15 கேள்விகள் கேட்கப்படும். குறைந்தது 09 கேள்விகளுக்குச் சரியாக பதிலளிக்க வேண்டும். வாய்மொழி அல்லது எழுதப்பட்ட சோதனை (மாநிலத்தைப் பொறுத்து) கோட்பாடு சோதனை கணினியில் நிறைவடையும். மேலும் கோட்பாடு சோதனையில் தேர்ச்சி பெற இரண்டுமே தேர்ச்சி பெற வேண்டும்.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Vaibhav Ganjapure (12 August 2016). "Not 18 years old? You can't ride bikes over 50cc". Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 August 2016.
  2. 2.0 2.1 "MOTOR VEHICLES ACT, 1988" (PDF). Archived from the original (PDF) on 10 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. s.3 and 4 of Motor Vehicles Act 1988, India
  4. "Renewal Driving License". Archived from the original on 11 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்

தொகு