ஓபராய், குர்கான்

தி ஓபராய், குர்கான் (The Oberoi), குர்கானில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர மதிப்பு கொண்ட ஹோட்டல் ஆகும். இது புது டெல்லியின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது. குர்கானை அடிப்படையாக்க் கொண்ட ஆர்பிட் ரிசார்ட்ஸ்க்கு இது சொந்தமானதாக இருப்பினும் ஓபராய் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. ஓபராய் குர்கான் ஹோட்டல் சுமார் 4 பில்லியன் மதிப்பில் (63 மில்லியன் டாலர்) மதிப்பில் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 13, 2011 இல் வணிக ரீதியாக பயணம் செய்பவர்களுக்கான உணவுச் சேவையினை திறந்தது. டிரிடென்ட் ஹோட்டலுக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள இந்த ஹோட்டல் தேசிய நெடுஞ்சாலை–8 க்கு மிக அருகில் அமைந்துள்ளது.[1][2]

ஜனவரி 2012 இல் ‘2011 ஆம் ஆண்டின், உலகின் முன்னணி மதிப்புமிக்க ஹோட்டல்’ என்ற பெயரினைப் பெற்ற முதல் இந்திய ஹோட்டலாக ஓபராய் குர்கான் ஹோட்டல் அமைந்தது. இந்தப் பட்டத்தினை பயணம் மற்றும் சுற்றுலா வணிகத்திற்கான ஆஸ்கார்ஸ் நிறுவனம் ‘உலகின் பயண விருதுகள்’ விழாவில் வழங்கியது.[3][4] அதற்கு முன்பு டிசம்பர் 2011 இல், சிஎன்என்கோ (CNNGo) வலைத்தளம் ‘பயணம் செய்ய வேண்டிய இந்தியா வின் 11 ஹோட்டல்கள்’ பட்டியலில் ஓபராய் குர்கான் ஹோட்டலினையும் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.[5]

இருப்பிடம்

தொகு

ஓபராய் குர்கான் ஹோட்டல் குர்கான் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஓபராய் ஹோட்டல், புது டெல்லி நகர மையத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சாலை மற்றும் மெட்ரோ ரயில் மூலமாக எளிதில் செல்லும் வண்ணம் இணைந்துள்ளது. இரு முக்கிய ரயில் நிலையங்களான புது டெல்லி ரயில் நிலையம் மற்றும் நிசாமுதீன் ரயில் நிலையம் போன்றவற்றினை ஓபராய் ஹோட்டலில் இருந்து 35 முதல் 45 நிமிடங்கள் பயணத்திலேயே அடைந்துவிடலாம். ஹோட்டலில் இருந்து, டிஎல்எஃப் சைபர் மையம் (தோராயமாக) 3 கிலோ மீட்டர் தூரத்திலும், ஓய்வுப் பள்ளத்தாக்கு (தோராயமாக) 7 கிலோ மீட்டர் தூரத்திலும், கனவுகளின் ராஜ்ஜியம் எனும் பகுதி (தோராயமாக) 9 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

அறைகளும் இதர வசதிகளும்

தொகு

இங்கு லக்சூரி மற்றும் டீலக்ஸ் அறைகள் உள்ளன. குளிர்பதனம், உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கானவசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், சேர்ந்திருக்கும் அறைகள், கதவு திறந்துவிடுபவர், விரைவாக பதிவிடுதல் மற்றும் வெளியேறுதல், பெண் பயணிகளுக்கான அறை, அறைச் சேவை, கட்டணத்துடன் கூடிய கம்பியில்லா இணையச் சேவை, விருந்தளிக்கும் வசதி மற்றும் கூப்பிடும்படியான மருத்துவர் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.[6][7]

குறிப்புகள்

தொகு
  1. "Oberoi opens 5-star hotel in Gurgaon". Business Standard. 13 April 2011. http://business-standard.com/india/news/oberoi-opens-5-star-hotel-in-gurgaon/432071/. பார்த்த நாள்: July 2, 2015. 
  2. "Oberoi group opens property in Gurgaon". The Hindu. 12 April 2011. http://www.thehindu.com/business/companies/article1691651.ece. பார்த்த நாள்: July 2, 2015. 
  3. "The Oberoi Gurgaon wins travel 'Oscar' at the World Travel Awards, even as India beats competition to be voted best destination". Daily Mail. 19 January 2012. http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2088696/The-Oberoi-Gurgaon-wins-travel-Oscar-World-Travel-Awards-India-beats-competition-voted-best-destination.html#ixzz1jySFIZQY. பார்த்த நாள்: July 2, 2015. 
  4. "The Oberoi, Gurgaon is World's Leading Luxury Hotel". Business Standard. http://www.business-standard.com/india/news/the-oberoi-gurgaon-is-worlds-leading-luxury-hotel/461702/. பார்த்த நாள்: July 2, 2015. 
  5. "11 Indian hotels to visit in 2012". CNNGo. 13 December 2011. http://www.cnngo.com/mumbai/visit/11-indian-hotels-to-visit-2012-533712. பார்த்த நாள்: July 2, 2015. 
  6. "The Oberoi Gurgaon Facilities". cleartrip.com. http://www.cleartrip.com/hotels/info/the-oberoi-gurgaon-327276. பார்த்த நாள்: July 2, 2015. 
  7. "Is this Delhi's best Presidential Suite?". Conde Nast Traveller. 7 February 2011. Archived from the original on 18 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் July 2, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபராய்,_குர்கான்&oldid=3928417" இலிருந்து மீள்விக்கப்பட்டது