ஓப்பன்ஸ்டேக்

ஓப்பன்ஸ்டேக் (OpenStack) அல்லது திறந்த அடுக்கு என்பது சேவை உட்கட்டுமானத்திற்கான (IaaS) மேகக் கணிமை திட்டமாகும். இது அப்பாச்சே உரிமத்தின் கீழான நெறிமுறைகளின்படி வெளியிடப்படும் கட்டற்ற திறந்த மூல மென்பொருள் ஆகும். ஓப்பன்ஸ்டேக் மென்பொருள் மற்றும் அதன் சமூகத்தை வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும், வலிமைப்படுத்தவும்[1] இந்தத் திட்டத்தை செப்டம்பர் 2012இல் நிறுவப்பட்ட இலாபநோக்கமற்ற நிறுவன அமைப்பான ஓப்பன்ஸ்டேக் அறக்கட்டளை மேற்பார்வையிடுகிறது.[2]

ஓப்பன்ஸ்டேக்
அண்மை வெளியீடுபோல்சோம் / செப்டம்பர் 27, 2012; 12 ஆண்டுகள் முன்னர் (2012-09-27)
மொழிபைத்தான்
மென்பொருள் வகைமைமேகக் கணிமை
உரிமம்அபாச்சே உரிமம்
இணையத்தளம்openstack.org

150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ், இன்டெல், கனோனிக்கல் நிறுவனம், சூசி லினக்சு, ரெட் ஹட், சிஸ்கோ சிஸ்டம்ஸ், டெல், ஹெவ்லட்-பேக்கர்ட், ஐபிஎம், என்ஈசி, விஎம்வேர் மற்றும் யாகூ! போன்றவை இவற்றில் சிலவாகும்.[3][4][5][6] பெயர்த்தகு மென்பொருளான இந்தக் கட்டமைப்பு பெரும்பாலும் குனூ/லினக்சு இயக்கு தளத்திலேயே மேம்படுத்தவும் பாவிக்கவும் பயன்படுத்துகிறது.

இத்தொழினுட்பத்தில் பல தொடர்புள்ள திட்டங்கள் அணியாக அடங்கியுள்ளன. இந்தத் துணைத்திட்டங்கள் ஒரு தரவுமையத்தில் பெரியளவில் செயல்பாட்டுத்திறன், தரவுத்தளம், கணிவலை வளங்களைக் கட்டுப்படுத்த மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தரவுமையத்தின் மையமான கட்டுப்பாட்டு முகப்புப் பெட்டி மூலம் கணிநிர்வாகிகள் கட்டுப்படுத்தவும் பயனாளர்கள் இணைய இடைமுகத்தைக் கொண்டு தங்கள் கணிவளங்களை மாற்றிக்கொள்ளவும் வழி செய்கிறது.

ஓப்பன்ஸ்டேக் திறந்த முறையிலான வடிவமைப்பு மற்றும் உருவாக்கும் செயற்பாடுகளைக் கொண்டு செயல்பட பொறுப்பேற்றுள்ளது. இந்த மென்பொருள் சமூகம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரப்படியான வழங்கல் சுழற்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.[7] ஒவ்வொரு வழங்கலின் திட்டமிடலின்போதும் ஓப்பன்ஸ்டேக் டிசைன் சம்மிட் என்ற வடிவமைப்பாளர் கருத்தரங்கின் மூலம் தங்கள் செல்வழியைத் தீர்மானிக்கின்றனர்.[8]

மேற்சான்றுகள்

தொகு
  1. "OpenStack Foundation Mission". Retrieved 7 January 2013.
  2. "OpenStack Launches as Independent Foundation, Begins Work Protecting, Empowering and Promoting OpenStack". BusinessWire. September 19, 2012. http://www.businesswire.com/news/home/20120919005997/en/OpenStack-Launches-Independent-Foundation-Begins-Work-Protecting. பார்த்த நாள்: 7 January 2013. 
  3. "Companies » OpenStack Open Source Cloud Computing Software". Openstack.org. Retrieved 2013-01-07.
  4. "HP Announces Support for OpenStack". H30507.www3.hp.com. 2011-07-27. Archived from the original on 2014-02-14. Retrieved 2012-10-23.
  5. "IBM supports OpenStack (Computerworld)". Computerworlduk.com. Retrieved 2012-10-23.
  6. "Dell OpenStack-Powered Cloud Solution". Content.dell.com. Retrieved 2012-10-23.
  7. "OpenStack Release Cycle". OpenStack Foundation. Retrieved 7 January 2013.
  8. "OpenStack Design Summit". OpenStack Foundation. Retrieved 7 January 2013.

வெளி இணைப்புகள்

தொகு

ஆவணமாக்கல்

தொகு

ஒளித விரிவுரை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்பன்ஸ்டேக்&oldid=3547154" இலிருந்து மீள்விக்கப்பட்டது