ஓமாயி வியாரவாலா

இந்தியாவின் முதல் புகைப்பட நிருபர்

ஓமாயி வியாரவாலா (ஹோமை வியாரவல்லா, Homai Vyarawalla, 9 திசம்பர் 1913 – 15 சனவரி 2012), இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் என அறியப்பட்டவர். பொதுவாக டால்டா-13 என அழைக்கப்பட்டவர். இவர் குஜராத் மாநிலத்தில், வதோதரா மாவட்டத்தின் நவசாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது 13 வயதில் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து 40 ஆண்டுகள் இந்தியப் பத்திரிகை உலகின் சிறந்த புகைப்பட நிருபராக பணியாற்றி 1970-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 2011 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியது.[1]

ஹோமை வியாரவல்லா
Homai Vyarawalla
பிறப்பு(1913-12-09)9 திசம்பர் 1913
நவசாரி, குஜராத், இந்தியா
இறப்பு15 சனவரி 2012(2012-01-15) (அகவை 98)
தேசியம்இந்தியர்
கல்விசர் ஜே. ஜே. கலைக்கல்லூரி, பம்பாய்
பணிபுகைப்பட நிருபர்

சாதனைகள் தொகு

  • 1942-ம் ஆண்டு டில்லியில், பிரித்தானிய தகவல் தொடர்பு (பி.ஐ.எஸ்) சேவையில் புகைப்பட நிருபராக பணியாற்றினார்.
  • இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே, அப்போதைய ஆங்கிலேயர்கள், மற்றும் இந்திய தலைவர்களின் பேச்சுக்கள், பொதுக்கூட்டங்களில், புகைப்பட நிருபராக பணியாற்றினார்
  • இந்தியா சுதந்திரம் அடைந்து 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தேசிய ‌கொடி ஏற்றப்பட்டதை புகைப்படம் எடுத்த பெருமைக்குரியவரானார்.
  • இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபு. ஜவஹர்லால் நேரு சந்திப்பினை புகைப்படம் எடுத்த பெருமையும் இவரைச் சாரும்.

பெற்ற விருதுகள் தொகு

2011 சனவரி மாதம் இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது.

மறைவு தொகு

சனவரி 15 2012இல் தனது வீட்டு கட்டிலிலிருந்து கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறி்ந்தது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இறக்கும் பொது இவருக்கு வயது 98.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமாயி_வியாரவாலா&oldid=2227957" இலிருந்து மீள்விக்கப்பட்டது